கோத்ரா கலவர வழக்கு: 7 பேர் குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0

2002 கோத்ரா கலவரத்தில் மூன்று முஸ்லிம்களை கொலை செய்தது தொடர்பான வழக்கு ஒன்றில் 7 பேரின் குற்றத்தை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2002 பிப்ரவரி 28 ஆம் தேதி குஜராத்தின் வளனா கிராமத்தில் வைத்து சுமார் 40 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலருக்கு படுகாயம் ஏற்ப்பட்டது. பலரின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

நீதிபதிகள் ஹர்ஷா தேவானி மற்றும் பிரேன் வைஷ்ணவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த 7 குற்றவாளிகளில் மூன்று மூன்றுபேர் குற்றமற்றவர்கள் என்று கடந்த 2011 நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேலும் மற்ற நான்கு பேர் கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூடுதல், வேண்டுமென்றே கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல் போன்ற சிறிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். தற்பொழுது இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இவர்கள் கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சடாபாய் என்ற ஹைதர் ஜீலா பார்வாத், நரன்பாய் சமந்த்பாய் பர்வாத், உதாசி ரன்சொத்பாய் தாகூர், வளபாய் ஜீலாபாய் பர்வாத், வித்தல் என்ற குச்சியோ மோடி பர்வாத், முலபாய் ஜீலாபாய் பர்வாத் மற்றும் மேரபாய் ஜீலாபாய் பர்வாத் ஆகியோர் கொலை குற்றங்கள் புரிந்தவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அல்லாமல் போபா பர்வாத் மற்றும் பாச்சு தாகூர் ஆகிய இருவரின் குற்றத்தினையும் இந்த பெஞ்ச் உறுதி செய்துள்ளது. அவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரில் 9 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.