கோத்ரா சம்பவம் போலவே புல்வாமா தாக்குதலிலும் பாஜக சதி!

0

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போன்று, புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பாஜகவின் சதி வேலை என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் குஜராத் முதல்வரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள சங்கர் சிங் வகேலா நிருபர்களிடம் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நாடு முழுக்க நடைபெற்றுள்ளன. ஆனால் அதை எல்லாம் மூடி மறைத்து வருகிறது பாஜக அரசு. பாலகோட் தாக்குதலில் எந்த ஒரு தீவிரவாதியும் கொல்லப்படவில்லை. எந்த ஒரு சர்வதேச விசாரணை அமைப்பும் கூட, தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை.

பாலகோட் விமானப்படை தாக்குதல் என்பது கோத்ரா சம்பவம் போன்று திட்டமிட்ட சதி. பாலகோட்டில் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். புல்வாமாவில் தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை தகவல் வந்த பிறகும் கூட, அரசு, எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் வெற்றிக்காக, குழுக்கள் நடுவே, மோதலை ஏற்படுத்துவது பாஜகவின் வாடிக்கையாக இருக்கிறது.  பாஜகவில் உள்ள நிர்வாகிகள் பலரும், தாங்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக கருதுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.