கோத்ரா ரயில் எரிப்பு மோடியின் வேலை. வாக்குமூலம் கொடுத்த சாத்வி பிராச்சி?

0

கோத்ரா ரயில் எரிப்பு மோடியின் வேலை. வாக்குமூலம் கொடுத்த சாத்வி பிராச்சி?

கஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல ஒன்றை பாக்கிஸ்தானில் நிகழ்த்துமாறு பாஜகவின் சாத்வி பிராச்சி கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சாத்வி பிராச்சி, மற்றுமொரு கோத்ரா போன்ற நிகழ்வை நடத்தி பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவரும் அந்த வீடியோவில், “நான் இரு கரம் கூப்பி பிரதமரை ஒன்று கேட்டுக்கொள்கிறேன், பிரதமரே, பாக்கிஸ்தானில் கோத்ரா போன்ற ஒரு நிகழ்வு நடத்தப்பட்டால் ஓட்டு மொத்த தேசமும் உன் முன் பணிந்துவிடும். ராவல்பந்தி மற்றும் கராச்சியை நாம் எரிக்கும் வரை தீவிரவாதம் ஓயாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த வீடியோ வெளியானதும், இவரது கூற்றுப்படி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மோடி தான் திட்டமிட்டு நிக்ழ்த்தினாரா என்று பல பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த பத்திரிகையாளர் ரவி நாயர், “பாஜக தலைவர் பிராச்சி இரண்டு விஷயங்களை தெளிவு படுத்தியுள்ளார். 1)மோடி அரசு இந்த தேர்தலை சந்திக்க மேற்கு எல்லையில் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தும். 2)கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை யார் செய்தார் என்று அவர் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.” என்று கூறியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை கொன்று பெண்களை கற்பழித்து குழந்தைகளை தீயிட்டு எரித்த மிக மோசமான இனப்படுகொலை நடைபெற்றது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை ஆராய்ந்த்த தடயவியல் நிபுணர்கள் கூட இந்த ரயில் வெளியில் இருந்து எரிக்கப்படவில்லை என்றும் வெளியில் இருந்து எரிபொருள் எதுவும் ரயிலுக்குள் வீசப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

Comments are closed.