கோரக்க்பூரை தொடர்ந்து ஃபரூக்காபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறையால் 49 குழந்தைகள் மரணம்

0

உத்திர பிரதேச மாநிலம் கோரபூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கும் ஏற்பட்ட குழந்தைகள் மரணித்துள்ள நிலையில் தற்போது ஃபரூக்காபாத்  மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 49 குழந்தைகள் மரணித்துள்ளன.

இதில் 30 குழந்தைகள் SNCU என்ற பச்சிளம் குழந்தை சிகிச்சை மையத்தில் உயிரிழந்துள்ளது. மேலும் 19 குழந்தைகள் பிரசவத்தின் போதோ, பிரசவித்த உடனேயோ உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மரணங்கள் குறித்து SNCU பொறுப்பு அதிகாரி டாக்டர் கைலாஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், குறைமாத பிரசவம், உடல் எடை குறைவாக பிறத்தல் ஆகியவை தான் காரணங்கள் என்று கூறியுள்ளார். மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இரண்டாவது முறை என்பதால் குழந்தைகள் நலம் குறித்து மாநில அரசின் இந்த மெத்தன போக்கிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் கன்ஷ்யாம் திவாரி தெரிவித்துள்ளார்.

முனந்தாக் அனடைபெற்ற கோரக்பூர் குழைந்தைகள் மரணத்தில் இருந்து மாநில பாஜக பாடம் கற்றுக்கொள்ளாமல் குழந்திகளின் உயிரைக் காத்த டாக்டர் கஃபில் கான் மீது பழி சுமத்துவது எப்படி என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வந்தது. தற்போதைய இந்த மரணம் குழந்தைகள் நலனில் ஆளும் பாஜக அரசு எத்தகைய அக்கறை கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது.

 

Comments are closed.