கோரக்பூர்: 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் பலி

0

உத்தரிய பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் பலியாகியுள்ளது. இத்துடன் இம்மாதம் மட்டும் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து BRD மருத்துவ கல்லூரி முதல்வர் PK சிங் கூறுகையில், 7  குழந்தைகள் மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், மற்ற குழந்திகள் வேறு பல காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய் கிழமை, உத்திர பிரதேச சிறப்பு அதிரடிப் படை, BRD மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் அவரது மனைவி ஆகியோரை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து முன்னர் நடைபெற்ற BRD மருத்துவமனை மரணங்கள் குறித்து விசாரித்து வந்தது.

முன்னதாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் குழந்தைகள் மரணித்ததை தொடர்ந்து தங்களது நிர்வாக தொய்வை மறைக்க உத்திர பிரதேச அரசு பல  குழந்தைகளின் உயிரை காத்த டாக்டர் கஃபீல் கானை பதவி நீக்கம் செய்தது. அவர் மீது பல அவதூறுகளும் பரப்பப்பட்டன. அத்துடன் BRD மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மனைவி மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தங்களது வழக்கறிஞரை சந்திக்க கான்பூர் சென்ற இவர்களை அங்கு வைத்து  சிறப்புப் படை கைது செய்துள்ளது.

இது போன்றே டாக்டர் கஃபில் கான் வீட்டிற்கும் காவல்துறை சென்றுள்ளது. அங்கு அவர் இல்லாததால் அவரை குறித்த தகவல்களை தங்களுக்கு அளித்து விசாரணைக்கு உதவ வேண்டும் என்று கஃபீல் கானின் குடும்பத்தினரிடம் காவல்துறை கூறியுள்ளது. மேலும் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு ஆதரவாக AIIMS-டில்லி மருத்துவர்கள் குழு இந்த விஷயத்தில் கஃபில் கானை உத்திர பிரதேச அரசு பலிகிடாவாக்கப் பார்க்கிறது என்று கூறியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் எதுவும் ஆக்சிஜன் குறைப்பாட்டால் ஏற்பட்டவை அல்ல என்றும் அவை பல்வேறு நோய்களால் ஏற்பட்டவை என்றும் கூறிவந்த அதித்யநாத் அரசு BRD மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்து வந்த M/s Pushpa Sales நிறுவனத்தின் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னர் ஏற்பட்ட இந்த குழந்தைகள் மரணத்திற்கு யோகி அரசின் நிர்வாக குறைபாட்டை குறை கூறிய எதிர்கட்சிகள் கோரபூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களின் ஆதரவை தர சென்றனர். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த அதித்யநாத், கோரக்பூர் ஒன்றும் சுற்றுலா தளம் அல்ல என்று கூறினார். தங்களின் நிர்வாக சீர்கேட்டை சென்ற இழப்பிலேயே அதித்யநாத் அரசு சரி செய்திருந்தால் மேலும் 42 குழந்தைகள் தற்போது உயிரிழந்திருப்பதை தவிர்த்திருக்க இயலும்.

Comments are closed.