கோழிகளுக்கு உணவு கொண்டு சென்ற வாகனம் மீது பஜ்ரங்தள் குண்டர்கள் தாக்குதல்

0

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜோரா கிராமத்தில் கோழிகளுக்கு உணவு கொண்டு சென்ற வாகனத்தை அதில் மாட்டிறைச்சி இருப்பதாக நினைத்து பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் தாக்கி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். மேலும் வாகனத்தின் உரிமையாளரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை பப்லு தாகூர் மற்றும் கவ்ரவ் தாகூர் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை ஆய்வாளர் லடியா தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசம் மன்பூர் பகுதிக்கு கோழி உணவுகளை எடுத்துச் சென்ற வாகனம் ஜோரா கிராமத்தில் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்ய மெக்கானிக்கை அழைத்து வருமாறு தனது ஓட்டுனரை அனுப்பி வைத்துள்ளார் வாகனத்தின் உரிமையாளர் ராஜேஷ் ஜெயின்.

ஆனால் வாகனத்தில் இருப்பது மாட்டிறைச்சி என்று கருதிய அப்பகுதி கிராமக்கள் வாகனத்தில் இருந்து ராஜேஷ் ஜெயினை இழுத்து அவரை தாக்கியுள்ளனர். பின்னர் சில நிமிடங்களிலேயே அவரது வாகனமும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Comments are closed.