கோழிக்கோடு: விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் பலி

0

கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு (ஜூன் 10) சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் இடையே நடைபெற்ற மோதலில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால் விமான நிலைய பணிகள் முடங்கின. சுpல விமானங்கள் அருகிலுள்ள கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
விமான நிலையத்தில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரை சோதனையிட வேண்டும் என்று சி.ஐ.எஸ்.எஃப். வீரர் கூறியதை தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. இந்த மோதலில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். மற்ற மூவர் காயமடைந்தனர்.
இன்று காலை நிலைமை சீராகியுள்ளதாகவும் விமான நிலையத்தில் சேவைகள் தொடர்வதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்திலேயே சி.ஐ.எஸ்.எஃப். வீரர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.