கோவாவில் மட்டிறைச்சிக்கு அனுமதி கொடுத்ததால் தான் முதல்வர் இறந்தார்- சாத்வி பிரக்யா

0

பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா, செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

இந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். ஜாமினில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்தை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் போபாலில் நேற்று சாத்வி பிரச்சாரத்தின் போது, மாட்டிறைச்சி உண்பது மிக மிக தவறானது. அது இந்து மதத்திற்கு எதிரானது. மாட்டிறைச்சி உண்பவர்கள் இந்துக்கள் கிடையாது. அவர்கள் எல்லோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை செய்யப்படும். கோவாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும். வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும். தென்னிந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மாட்டிறைச்சி உடனே தடை செய்யப்படும்.

கோவாவில் பாஜக ஆட்சியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. மாட்டிறைச்சி விற்பனை ஆனதால்தான் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார். அவர் பசுவை மதிக்கவில்லை. அதனால் தண்டனை பெற்றார். இவ்வாறு சாத்வி பேசியுள்ளார்.

Comments are closed.