கோவா தேர்தலில் பா.ஜ.க வெல்லும் வாய்ப்பு குறைவு: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

0

கோவா ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுபாஷ் வெளிங்கர் கடந்த திங்கள் அன்று, வட்டார மொழியை பள்ளிகளின் பாடமொழியாக மாற்றும் பா.ஜ.க வின் தேத்தல் வாக்குறுதிகளில் அது பின்வாங்கிய காரணத்தால் வரவிருக்கும் தேதலில் அக்கட்சி வெற்றி பெரும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறியிருந்தார்.
பாரதிய பாஷா சுரக்ஷா மன்ச் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அவர் பனாஜியில் வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, கோவா ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து வரும் தேர்தலில் பா.ஜ.க வை தோற்கடிக்க புதிய அரசியல் கட்சி ஒன்றை தாங்கள் நிறுவ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசு தாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது என்றும், வட்டார மொழிகள் குறித்து அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவரை ஆர்.எஸ்.எஸ். அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மன்மோகன் வைத்யா கூறுகையில், “ஆளும் பா.ஜ.க விற்கு எதிராக புதிய கட்சி தொடங்கியமையால் சுபாஷ் வெளிங்கர் கோவா ஆர்.எஸ்.எஸ். தலைவர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
வெளிங்கர் மற்றும் ஆவறது ஆதரவாளர்கள், கோவா வில் இயங்கி வரும் ஆங்கில மொழிவழிக் கல்வி நடத்தும் பள்ளிகளுக்கு அரசு உதவிகளை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.