கோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்

0

கோவா: பாஜக தலைவரின் கட்டிடத்தில் 100கிலோ போதைப்பொருள்

கடந்த திங்கள் அன்று கோவா பாஜக தலைவருக்கு சொந்தமான வர்த்தக கட்டிடத்தில் சுமார் 100 கிலோ போதைப் பொருட்களை வருவாய்துறை உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விஜய் இணடஸ்ட்ரீஸ் என்ற அந்த வர்த்தக கட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்ட கெடமைன் என்ற போதைப்பொருள் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் வாசுதேவ் பரப் என்பவராவார். இவர் வடக்கு கோவா பாஜகவின் பொதுச்செயலாளர் என்று தெரியவந்துள்ளது.

தற்போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து மேலும் எதுவும் கூற இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.