கோவா: முன்னால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் புதிய கட்சி தொடங்கினார்.

0

கோவா ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுபாஷ் வெளிங்கர் பா.ஜ.க உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்து கூட்டாக விலகினர். தற்போது கோவாவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் வேலையில் இவர் கோவா சுரக்ஷா மன்ச் என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்த புதிய கட்சியின் தலைவராக ஆனந்த் ஷிரோத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய பாஷா சுரக்ஷா மன்ச் என்ற அமைப்பின் மூத்த தலைவராவார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தங்களது இந்த கோவா சுரக்ஷா மன்ச் கட்சி கோவாவின் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 35 தொகுதிகளில் பரவியிருப்பதாக வெளிங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் வர இருக்கின்ற தேர்தலில் தங்கள் கட்சி பா.ஜ.க வை தோற்கடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BBSM எனப்படும் பாரதிய பாஷா சுரக்ஷா மன்ச் அமைப்பு கோவாவின் ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோவாவின் தாய்மொழியில் கல்வி நடத்தப்பட வேண்டும் என்றும் போராடி வருகின்றது. இதன் காரணமாகவே வெளிங்கருக்கும் பா.ஜ.க விற்கும் இடையேயான பிளவு ஏற்ப்பட்டது.

அடுத்த வருடம் வர இருக்கும் தேர்தல் குறித்து சிவ சேனா கட்சியுடனும், கோவா பிரஜா கட்சியுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மகார்ஷ்ற்றவதி கோமான்டக் கட்சி (MGP) உடனும் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் GSM கட்சி தெரிவித்துள்ளது. மேலும் அக்கட்சி கூட்டணியில் இணைந்தாலும் இல்லை என்றாலும் வரும் தேர்தலில் பா.ஜ.க வை தாங்கள் தோற்கடிக்கப் போவது நிச்சயம் என்று வெளிங்கர் தெரிவித்துள்ளார்.

மொழி மட்டுமல்லாது  தங்கள் கட்சி கோவா சந்திக்கும் மின்சக்தி மற்றும் நீர்வளம் குறித்த பிரச்சனைகள் குறித்தும் கவனம் செலுத்தும் என்று BBSM இன் அரசியல் பிரிவுத் தலைவர் உதய் பெம்ப்ரே தெரிவித்துள்ளார்.

Comments are closed.