கோவிந்த் பன்சாரேவை கொலை செய்தது சனாதன் சன்ஸ்தா: SIT குற்றப்பத்திரிகை தாக்கல்

0

பிரபல சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளிடம் அவ்வழக்கின் முக்கிய சாட்சியான சஞ்சய் சாந்த்வில்கர் மற்றும் மேலும் மூன்று சாட்சிகள் பல முக்கிய வாக்குமூலங்களை கொடுத்துள்ளனர். அதில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விரேந்திர தாவ்டே சனாதன் சன்ஸ்தா அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சாந்த்வில்கரிடம் அவரது தொழிற்சாலையில் ஆயுதங்கள் செய்ய வற்புறுத்தியதாக கூறியுள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கண்காணிப்பு வேலைகளை நடத்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருமாறு தாவ்டே கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளனர்.

அவர்களது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2013, ஏப்ரல் மாதம் சாந்த்வில்கரின் இரும்பு ஆலைக்கு தாவ்டே வருகை புரிந்தார். அப்போது சாந்த்வில்கர் தான் சனாதன் சன்ஸ்தாவை விட்டு விலகிவிட்டதாகவும் தற்போது தனது தொழிலில் கவனம் செலுத்தி வருவதாகவும் தாவ்தேவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சாந்த்வில்கரிடம் ஹிந்து தர்மத்திற்காக அவர் வீட்டில் இருந்து கூட பணியாற்றலாம் என்று தாவ்டே கூறியுள்ளார். மேலும் இந்து எதிர்ப்பு சக்திகளுடன் போராட மத காரணங்களுக்காக தங்களுக்கு ஆயுதங்கள் வேண்டும் என்றும் அதனை சாந்த்வில்கரால் செய்து தர இயலும் என்றும் தாவ்டே கூறியுள்ளார். இதற்கு சாந்த்வில்கர் மறுப்பு தெரிவிக்கவே தாவ்டே அங்கிருத்து சென்று விட்டார்.”

“இந்த சம்பவம் நடந்து 8 அல்லது 10 நாட்களுக்கு பிறகு சாந்த்வில்கரின் கொல்ஹாபூர் தொழிற்சாலைக்கு ஒருவரை தாவ்டே ஆயுதங்களுடன் (ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரிவால்வர்) அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அருகில் சிறை இருப்பதானால் தன்னால் அதனை பெற முடியாது என்றும் வேறு இடத்தை கூறி அனுப்புவதாகவும் கூறி சாந்த்வில்கர் அந்த ஆயுதங்களை பெற மறுத்துவிட்டார்.” என்று அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு இரண்டு நாட்கள் கழித்து தாவ்டே சாந்த்விலகரை சந்தித்து இரண்டு நபர்களுக்கு அடைக்கலம் தயார் செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இருவர் சில நபர்களை குறித்து ஆய்வு நடத்த கொல்ஹாபூருக்கு வருகை தருவதாக தாவ்டே கூறியுள்ளார். இதற்கு சில நாட்கள் கழித்து இருவர் சாந்த்விகல்ரின் தொழிற்சாலைக்கு இரவு 8 மணியளவில் வருகை புரிந்ததுள்ளனர். அவர்கள் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வருகை புரிந்ததால் தன்னால் எந்த ஏற்பாடுகளும் செய்ய இயலவில்லை என்று அவர்களிடம் சாந்த்வில்கர் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். அந்த இருவர் சாரங் அகோல்கர் மற்றும் விணெய் பாவார் என்று சாட்சிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயுதங்களுக்கு தாவ்டே சாக்கலேட் என்ற குறிப்பு பெயர்களை பயன்படுத்தினார் என்றும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாட்சியங்கள் அனைவரது வாக்குமூலங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதினால் அதனை சிறப்பு புலனாய்வுத்துறை (SIT) கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்துள்ளது. சாந்த்வில்கர் மற்றும் அவரது மூன்று பணியாளர்களின் வாக்குமூலங்கள் பிரிவு 164 இன் கீழ் பெறப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின்படி சனாதன் சன்ஸ்தாவின் சமீர் கைக்வாத் மற்றும் சாரங் அகோல்கர் ஆகியோர் பன்சாரேவை சுட்டுக் கொன்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. கைக்வாத் மீது சென்ற வருடம் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான விணெய் பவார் கொலை செய்யப்பட்ட இடத்தில் கொலைக்கு ஒரு நாள் முன்னும் கொலை நடந்த பிறகும் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

2015 பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் கோவிந்த் பன்சாரே மற்றும் அவரது மனைவி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் பன்சாறேவின் மனிவிக்கு தலையில் காயம் பட்டு அவரது மண்டைஓடு ஒடிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பியுள்ளார். இந்த தாக்குதலில் 7.65mm ஆயுதத்தால் தாக்கப்பட்ட பன்சாரே உயிரிழந்தார்.

Comments are closed.