கோஷமிடுவதும் கொடி ஏற்றுவதும் இன்று தேசப்பற்றின் அடையாளமாகிவிட்டன: முன்னாள் நீதிபதி AP.ஷா

0

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விமர்சித்த டில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி A.P.ஷா, இந்தியர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் எதை உண்ணலாம், எதனை உண்ணக் கூடாது, எதனை பார்க்கலாம் எதைப்பற்றி பேசலாம் என்பதும் கூட அவர்களுக்கு கூறப்படுகிறது என்று கூறியுள்ளார். நாட்டின் பல்கலைகழகத்தில் எழும் கருத்து வேறுபாடுகள் கூட அடக்கப்படுகின்றன. தற்போது “கோஷமிடுவதும் கொடி ஏற்றுவதும் தேசப்பற்றின் சோதனைகளாகி விட்டன.” என்று அவர் கூறியுள்ளார்.

டில்லியில், M.N. ராய் நினைவு உரையின்போது போது பேசுகையில், இணையதள குண்டர்களால் தனது கருத்துக்களுக்காக தொந்தரவு செய்யப்பட்ட குர்மெஹர் கவுரின் நிலை குறித்து அவர் குறிப்பிட்டார். தேசத்தின் கல்வி நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன என்றும் எந்த ஒரு சுதந்திர எண்ணங்களையும் தகர்க்கும் கடுமையான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “தற்போதைய சூழ்நிலையில், அரசின் பார்வைகள் அல்லது அரசு அங்கீகரிக்காத பார்வைகளைவிட வேறுபட்ட பார்வைகளை யாரேனும் கொண்டிருந்தால் உடனடியாக அவர்கள் தேச துரோகிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் பட்டமளிக்கப் படுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார். இவற்றை பயன்படுத்தி வேற்றுமை கருத்துக்கள், விமர்சனங்கள் ஆகியவை ஒடுக்கப்படுகிறது என்றும் இன்னும் இவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதியப்படுவது வருத்தத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

ரபிந்தரநாத் தாகூரின் தேசிய வாதத்தையும் சாவர்கரின் தேசியவாதத்தையும் ஒப்பிட்டு பேசிய அவர், பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவில் மக்கள் கருத்துகளின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். “ நாம் இந்த வேற்றுமையை மதிக்க வேண்டுமேயல்லாது தேயவாதம் மற்றும் தேசப்பற்று ஆகியவை தொடர்பாக நமக்கு மாறுபட்ட கருத்து கொண்டவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார். ஒரே கருத்தை பரப்புவதும் உள் மற்றும் வெளி விமர்ச்சனகளை நிராகரிப்பது குடிமக்களிடையே இன்னும் பிளவுகளை அதிகப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, ஒரு நாடு என்பது அதன் எல்லைகளா அல்லது அதில் வாழும் மக்களா என்ற கேள்வியை கேட்பது நம் அவசியம் என்று அவர் கூறியுள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது அரசு நமக்கு வழங்கும் அன்பளிப்போ சலுகையோ அல்ல என்று கூறிய அவர் அது பல்லாண்டு கால இந்திய மக்களின் தியாகத்தின் முடிவில் அரசியல் சாசனம் நமக்களித்த உரிமை என்று குறிப்பட்டுள்ளார்.

தற்போது பேச்சு சுதந்திரம் நம் நாட்டில் தாக்கப்படுகிறது என்றும் அதனை பாதுகாக்க நீதிமன்றங்கள் கூட தவரிவிட்டன என்று அவர் கூறியுள்ளார். இதனை குறிப்பிடும் போது திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் ஊடகங்களின் ஒரு பகுதியினர் போலியான செய்திகளை பரப்பியும் சிலர் இது போன்ற தேசப்பற்று / தேசவிரோத விவாதங்களினாலும், சார்புநிலை மற்றும் ஒரு சார்பு செய்திகள் மூலமும் பேச்சு சுதந்திரத்திற்கான தடைக்கு உதவுகின்றனர் என்று நீதிபதி ஷா கூறியுள்ளார்.

இந்தியாவின் அவசர நிலையின் போது பேச்சு சுதந்திரத்தை பாதுகப்பத்தில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் தற்போது இந்த நிலையில் இருப்பது நகைமுரண் என்று நீதிபதி ஷா குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.