கௌரி லங்கெஷ் கொலை வழக்கு: வெடிகுண்டு தயாரிக்க பயிற்சிபெறும் குற்றாவாளிகள்!

0

கௌரி லங்கெஷ் கொலை வழக்கில் தலைமறைவான நான்கு இந்துத்துவ குற்றவாளிகளுக்கு, அபினவ் பாரத் 2011-லிருந்து 2016 வரை நாடு முழுவதும் இரகசிய முகாம்களில் வெடிகுண்டு தயாரிக்க, சானதன் சன்ஸ்தா குழுவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. 

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகளில் குற்றவாளியான அபிநவ் பாரதி தலைமறைவாகிவிட்டர். மேலும் ராம்ஜி கல்சுங்ரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டது.

மாலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளரான பிரக்யா சிங் தாகூரும் கூட.

லங்கெஷ் கொலையில், கைது செய்யப்பட்டுள்ள சானதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த மூன்று பேரின் முகாம்களுக்குச் சென்ற புலனாய்வு குழு, அங்கு ஒரு “பாபாஜி” மற்றும் நான்கு “குருக்கள்” அந்த முகாம்களில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்தது.

மேலும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக “பாபாஜி”, நவம்பர் 2018இல் கைது செய்யப்பட்ட சுரேஷ் நாயர் எனவும் அந்த “குருக்களில்” மூவர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வழக்கில் குற்றவாளிகளான டாங்கே, கல்சங்ரா மற்றும் அஷ்வினி சௌஹன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு குற்றாவாளி, மேற்கு வங்கத்தில் இந்துத்துவ அமைப்பான பவானி சேனாவை சேர்ந்த பிரதாப் ஹஸ்ரா ஆகும்.

சானதன் சன்ஸ்தா இந்தியா முழுவதும் 19 முகாம்களை ஏற்பாடு செய்ததாகவும், அதில் துப்பாக்கிச் சூடு, வெடிக்கும் சாதனங்கள் மற்றும் தந்திர அபாயங்கள் ஆகிய பயிற்சிகள் அளிப்பதாக போலிஸார் தெரிவித்தனர். பகுத்தறிவாளரான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட அறிஞர் எம்.எம். கல்பர்கி மற்றும் கௌரி லங்கெஷ் ஆகியோரின் படுகொலைகளில் இவர்களுக்கு தொடர்புள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் மாதத்தில், கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்பர்கி கொலை வழக்கையும் லங்கெஷ் கொலை வழக்கை விசாரிக்கும் அதே சிறப்பு குழுவிற்கு மாற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

கல்பர்கி, லங்கெஷ், நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சரே ஆகியோரின் படுகொலைகள் “மிக முக்கியமான வழக்கு” என்று பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

Comments are closed.