கௌரி லங்கேஷ் படுகொலை: இந்துத்துவத்தின் தொடர்பு அம்பலம்

0

கௌரி லங்கேஷ் படுகொலை: இந்துத்துவத்தின் தொடர்பு அம்பலம்

பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான கௌரி லங்கேஷ் கடந்த வருடம் செப்டம்பர் 5ஆம் தேதி தனது வீட்டின் வெளியே வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் சகிப்பின்மை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியது. இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகள் காரணமாகத்தான் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார் என்று அப்போதே சொல்லப்பட்ட நிலையில் தற்போது வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) சமர்ப்பித்துள்ள முதல் குற்றப்பத்திரிகை இக்கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 650 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை மே 30 அன்று சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்தது. வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் குற்றபத்திரிகையின் 140 பக்கங்களை இப்போது தாக்கல் செய்யவில்லை என்றும் எஸ்.ஐ.டி. கூறியது.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என தொடர்ந்து இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வந்த போதும் இந்த வழக்குகளில் போதிய முன்னேற்றம் காணாதது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில்தான் கௌரி லங்கேஷ் படுகொலையில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் கைதை சிறப்பு புலனாய்வு குழு பிப்ரவரி 18 அன்று மேற்கொண்டது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தின் மாடூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். லங்கேஷை படுகொலை செய்வதற்கான ஆயுதங்களை பிரவீன்தான் வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறி இந்து கடவுள்களை விமர்சித்த காரணத்திற்காகத்தான் லங்கேஷை படுகொலை செய்ததாக நவீன் கூறியுள்ளார். இவரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சிகாரிபுரா பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரை எஸ்.ஐ.டி. கைது செய்தது. தொடர்ந்து மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் காலே, அமித் தெக்வேகர் மற்றும் கர்நாடகாவின் விஜய்புராவை சேர்ந்த மனோகர் யவாடே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவின் மற்றொரு சிந்தனையாளரான கே.எஸ். பகவானை கொலை செய்தவற்கும் தாங்கள் திட்டம் தீட்டியதை இவர்கள் விசாரணையின் போது தெரிவித்தனர். மிகப்பெரும் ஒரு வலைப்பின்னல் இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற தனது சந்தேகத்தையும் எஸ்.ஐ.டி. வெளிப்படுத்தியுள்ளது. அமோல் காலேயிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் 26 நபர்களின் பெயர்கள் இவர்களின் ஹிட் லிஸ்டில் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. கௌரி மற்றும் கே.எஸ். பகவானின் பெயரை வெளியிட்ட காவல்துறையினர் மற்றவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இவர்களில் பத்து நபர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.