சக மனிதர்கள் சம மனிதர்கள்

0

சக மனிதர்கள் சம மனிதர்கள்

“அத்தா! இன்னிக்கு நான் ஸ்கூலில் லில்லிபுட் பார்த்தேன்” என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு ஓடிவந்தான் கரீம். அவனுடைய உம்மா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றிருந்தார். அவர்கள் திரும்புவதற்குள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்த முஸ்தபா, டீ போட்டு, அதை அருந்தியபடி, லேப்டாப்பில் எதையோ வாசித்தபடி மும்முரமாக இருந்தார். அப்போது, கதவு திறக்கும் சத்தமும் அதைப் பின்தொடர்ந்து கரீமின் சத்தமும் வந்தன.

லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தவர், “வீட்டில் நுழைந்தால் முதலில் ஸலாம்” என்று நினைவு படுத்தினார். அவசரமாக “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றான் கரீம். சில பைகளுடன் உள்ளே நுழைந்த கரீமின்  உம்மாவும் ஸாலிஹாவும் ஒரே நேரத்தில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றனர்.

“வஅலைக்கும் ஸலாம்” என்று பதிலளித்தார் முஸ்தபா. களைப்பாய்த் தென்பட்ட தம் மனைவியிடம், “இப்பொழுதுதான் டீ போட்டு இறக்கினேன். சூடு குறையாமல் இருக்கு. இந்தா குடி” என்று ஒரு கப்பில் டீ எடுத்து வந்து தந்தார்.  ஸாலிஹா தன் அம்மாவுடன் பைகளைத் திறந்து, வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைப்பதில் பிஸியாக இருக்க, கரீமோ தன் தந்தையின் பின்னாடியே கிச்சனுக்கும் ஹாலுக்குமாக ஓடிவந்தான்.

“யார் லில்லிபுட்? என்ன பார்த்தே?” மீதமிருந்த தன் கப் டீயுடன் சோபாவில் சாய்ந்து அமர்ந்து, புன்சிரிப்புடன் மகனை விசாரித்தார் முஸ்தபா.

“எங்கள் ஸ்கூல் ஆபீஸ் ரூம் இருக்குதே, அங்கு புதுசா ஒருத்தரை வேலைக்குச் சேர்த்திருக்காங்க. அவர் என்னுடைய உயரம்தான் இருக்கார் அத்தா. ஆனால் அவர் பாய் இல்லே. பிக் மேன். திக்கா மீசையெல்லாம் இருக்கு. குட்டியா பேண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு அவர் நடந்து போறதைப் பார்த்தாலே ரொம்ப சிரிப்பா இருக்கு.”

‘‘சர்க்கஸில் பஃபூன் இருப்பாங்களே அப்படியா?” என்று கேட்டாள் ஸாலிஹா. தன் தம்பியின் சிரிப்பும் விவரிப்பும் அவளது கவனத்தை திருப்பியிருந்தது. முஸ்தபா தம்முடைய புன்சிரிப்பை நிறுத்திவிட்டு தம் மகன் கூறுவதை அமைதியாகக்  கேட்டுக் கொண்டிருந்தார்.

‘‘அவரைப் பார்த்து நீங்களெல்லாம் சிரிச்சீங்களா?’’ என்று கேட்டார் கரீமின் தாயார்.

‘‘அவர் எதிரில் சிரிக்கலை மம்மி. ஆனால் நாங்கள் பேசும்போது சிரிச்சுகிட்டோம். என் ஃப்ரெண்டுதான் அப்படி குள்ளமாக இருப்பவர்களை லில்லிபுட் என்று சொல்லவேண்டும் என்று சொன்னான்’’ என்றான் கரீம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.