சங்கபரிவாரின் அடுத்த குறி

0

சங்கபரிவாரின் அடுத்த குறி

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ராமனை வீதிக்கு இழுத்துள்ளனர் சங்பரிவார்கள். சங்பரிவார்களின் அரசியல் பிரவேசத்திற்கும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் பெருமளவில் உதவியது அயோத்தியா விவகாரம். அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித், ராமன் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்ற பொய்யை அடித்தளமாகக் கொண்டு தனது அரசியல் பாதையை வகுத்துக் கொண்டது சங்பரிவாரம். 1984ல் வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி, 2014ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்ததற்கு இந்த விவகாரம் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. பாபரி மஸ்ஜித் &- ராமர் கோயில் விவகாரம் மூலம் மக்களில் ஒரு சாராரை அச்சுறுத்தியும் மற்றொரு சாராரை தனது வட்டத்திற்குள் கொண்டு வந்ததும் சங்பரிவாரின் வெற்றி என்பதை மறுக்க முடியாது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் கமிஷன் (சுருக்கமாக மண்டல் கமிஷன்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த பரிந்துரையை 1990ல் நிறைவேற்றினார் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அவர்களை அதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை பொறுத்துக் கொள்ள இயலாத சங்பரிவார்கள் அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்து அத்வானி தலைமையிலான ரத யாத்திரையை தொடங்கினர். ‘‘நான் மண்டலை அமல்படுத்துகிறேன். அவர்கள் கமண்டலத்தை ஏந்தியிருக்கிறார்கள்’’ என்றார் வி.பி.சிங். நாடு முழுவதும் ரத்தக் களறியை ஏற்படுத்திய இந்த ரத யாத்திரையை பீகாரில் தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்தார் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அக்டோபர் 29 அதிகாலையில் பீகாரின் சமஸ்திபுரில் கைது செய்யப்பட்ட அத்வானி கைது செய்யப்படுவதற்கு முன் வி.பி.சிங் அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன் பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க வி.பி.சிங் அமைச்சரவை கவிழ்ந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.