சங்கபரிவாரின் சபரிமலை அரசியல்!

0

சங்கபரிவாரின் சபரிமலை அரசியல்!

அயோத்தியை அடுத்து சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்பை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் அவ்வமைப்பு ஈடுபட்டுள்ளது. இது கேரளாவில் பல்வேறு மதத்தவர்களிடையே வகுப்புவாத பிரிவினைக்கு வழிவகுத்து மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் சூழலுக்கு மாநிலத்தை தள்ளியுள்ளது. முன்னர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகள் பெண்களையும், பக்தர்களையும் வீதிகளில் களமிறக்கியுள்ளன. இதுவெல்லாம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வாக்கு வங்கியாக மாற்றுவதற்கான தந்திரம் என்பது சங்கபரிவார்களை குறித்து அறிந்தவர்களுக்கு தெரிந்த விஷயம்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண் வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சபரிமலை விவகாரத்தை பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தோல்வியடைந்த மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வியாபாரிகளை நெருக்கடியில் ஆழ்த்தி, சிறு & குறு தொழில்களை ஒழித்துக்கட்டும் ஜி.எஸ்.டி., ரஃபேல் ஊழலில் பிரதமர் மோடியின் பங்கு, அன்றாடம் உயரும் எரிபொருட்களின் விலை -இவையெல்லாம் மோடி தலைமையிலான அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியுள்ள வேளையில்தான் ஆபத்பாந்தவனாக சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான அனுமதி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.

நம்பிக்கையை பாதுகாப்பதற்கல்ல, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில்தான் வகுப்புவாதத்தை தூண்டி பக்தர்களை ஆர்.எஸ்.எஸ். வீதிகளில் இறக்கியுள்ளது. இந்துக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு இடதுசாரி அரசையும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் சங்கபரிவார் தனது நோக்கத்தில் வெற்றியடைந்துள்ளது என்று கூறுமளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.