சங்பரிவாருக்கு துணைபோகும் ஃபேஸ்புக்?

0

சங்பரிவாருக்கு துணைபோகும் ஃபேஸ்புக்?

ஃபேஸ்புக் நிறுவனத்தில் இந்திய பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் திருமதி அன்கி தாஸ், வரம்பு மீறி பதிவிடும் இந்து தேசியவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக நலன்களை பாதிக்கும் என்று கூறியதாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர். ஃபேஸ்புக்கின் பக்க சார்பு தன்மை குறித்து அவ்வப்போது செய்திகள் வெளி வந்துள்ளன. தற்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியான கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங், ‘முஸ்லிம் குடியேற்றவாசிகளை சுட்டுத்தள்ள வேண்டும்’ என்றும் முஸ்லிம்களை ‘துரோகிகள்’ என்றும் ‘பள்ளிவாசல்களை இடிக்க வேண்டும்’ என்றும் பதிவிட்டிருந்தார். பொது வெளியிலும் இவ்வாறு பேச அவர் தவறவில்லை. இவரின் பதிவுகள் ‘அபாயகரமானவை’ என்றும் ஃபேஸ்புக்கின் வெறுப்பு பேச்சு வரையரைக்கு எதிரானவை என்றும் முடிவுக்கு வந்த ஃபேஸ்புக் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தின் வெறுப்பு பேச்சு விதிகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் அன்கி தாஸ், ராஜா சிங் மீது நடவடிக்கை எடுத்தால் பா.ஜ.க. உடனான நிறுவனத்தின் உறவுகள் பாதிப்படையும் என்றும் அதன்மூலம் வணிக ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறி நடவடிக்கைகளை தடுத்ததாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.