சங்பரிவார்: தொடரும் மர்ம மரணங்கள்

0

சங்பரிவார்: தொடரும் மர்ம மரணங்கள்

1968க்கும் – 2018க்கும் இடையே இந்திய தேசத்தில் ஏராளமான மர்ம மரணங்களும் என்கௌண்டர் படுகொலைகளும் தீவிரவாத தாக்குதல்களும் நடந்துள்ளன. தற்போதைய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதல் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்பட சங்பரிவார தலைவர்கள் வரை பலரும் இத்தகைய வழக்குகளின் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இஷ்ரத் ஜஹான், ஹேமந்த் கர்கரே, நீதிபதி லோயா முதல் குஜராத் பா.ஜ.க. அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சுனில் ஜோஷி, மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உள்பட மர்மமான முறையில் மரணித்தவர்கள் ஏராளம். ‘மர்மம்’ என்ற திரைக்கு பின்னால், இத்தகைய நாச வேலைகளின் பின்னணியில் உள்ள மூளையும், இரத்தம் தோய்ந்த கரங்களும் யாருடையன என்பது குறித்து தனியாக கூறத் தேவையில்லை. சங்பரிவாரின் சித்தாந்தத்தையும் செயல் முறையையும் வரலாற்றையும் அறிந்தவர்கள் எவரும் இதுக் குறித்தெல்லாம் ஆச்சரியப்படமாட்டார்கள்.

தீவிர இனவெறியை அடிப்படையாகக் கொண்டு, முழுமையான அல்லது அதைவிட குறைவான ரகசிய செயல்திட்டங்களுடன் இயங்கும் துணை இராணுவ கட்டமைப்புடன் கூடிய தீவிரவாத குழுவின் கணக்கு புத்தகத்தில் ‘மர்மமாக’ கருதப்படும் படுகொலைகள் இடம் பெறும். முதலில் வெளிப்படையான எதிரிக்கு எதிராக, இரண்டாவது சொந்த சாதி & -மத & -இன & சமூகத்தில் மாற்று கருத்துடையவர்களுக்கு எதிராக, மூன்றாவது ஒரே கொள்கை மற்றும் செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சொந்த குழுவில் உள்ள, ‘உள்ளக எதிரி’க்கு எதிராக இத்தகைய தீவிரவாத குழுக்களின் கொலைக்கத்தி நீளும். … <strong><span style=”color: red;”>முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener”> இங்கு செல்லவும்</a> </span></strong>

 

Comments are closed.