சங் பரிவார் அமைப்புகள் நாட்டின் ஆன்மாவை சிதைக்கின்றன

0
வரலாற்று ஆசிரியர் நாராயண் ஜா ஆர்.எஸ்.எஸ்,வி.எச்.பி,போன்ற சங்கபரிவார வெறியர்களிடம் பல அனுபவங்களை தன்னுள் கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இவர் எழுதிய புத்தம் ‘புனித மாடு’ (the holy cow): இந்திய நாட்டின் உணவு பழக்கதில் மாட்டிறைச்சி எவ்வாறு இடம்பெற்றது என்று விரிவாக எழுதி இருந்தார். இந்த புத்தகம் வெளிவந்த போது ஆர்.எஸ்.எஸ்,சிவசேன அமைப்புகள் நாராயண் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். நாராயண் அவர்களை கைது செய்யவேண்டும் என்று போராடினர். அவரின் வீட்டை இடிக்கவும் முயற்சித்தனர்.
ஒருமுறை இவரை டெல்லி பல்கலைகழகத்தில் வைத்து தாக்கினர். இப்படி பல நெருக்கடியை சங்கபரிவார அமைப்புகள் தொடர்ந்து இவருக்கு கொடுத்தனர்.
புத்தகத்தின் பிரதியை எரித்தும் ஹைதராபாத் நிதிமன்றத்தில் புத்தகத்தின் மீது தடை கோரி வழக்குகள் நடத்தி புத்தகத்தின் மீது தடையை பிறப்பித்தனர். சட்டபோரட்டங்களுக்கு பின் புத்தகத்தின் மீது தடை நீங்கியது. இந்த புத்தகம் லண்டனில் ‘The myth of the holy cow’ என்ற பெயரில் வெளியிடபட்டது. இரண்டு வருடங்கள் நாராயண் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தார்.
சங் பரிவார் அமைப்புகள் இந்தியாவின் இறையாண்மையை எவ்வாறு சிதைக்கின்றன என்பது குறித்து சமீபத்தில் ஆங்கில இணையதளம் ஒன்றில் நாராயண் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முக்கிய கருத்துகளின் தமிழாக்கம்…
2014 இல் பா.ஜ.க  ஆட்சிக்கு வருவதற்கு முன்னே இந்துத்துவா சக்திகள் அவர்களுடைய கலாச்சார சுத்திகரிப்பை செயல்படுத்தி வருகின்றன . இவர்களுடைய சிந்தனையாளர் தீனாநாத் பத்ரா இராமாயணம் குறித்த கட்டுரையை டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்க செய்தார். இந்து மதம் குறித்து வெண்டி டோனிகர் எழுதிய புத்தகத்தை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்ப பெறுவதற்கு அதன் பதிப்பாளரை பணித்தனர்.
நாடாளுமன்றத்தில் தனிபெரும்பன்மையை கொண்ட பா.ஜ.க. தற்பொழுது வி.எச்.பி., ஹனுமான் சேனா, ராம் சேன, சனாதன் தர்ம சன்ஸ்தா போன்ற தனது காவி படைகளை தங்களுடைய கருத்திற்கு எதிர் கருத்து கொண்ட அறிவு ஜீவிகளையும்  எழுதாளர்களையும் தாக்குவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் சில நேரங்களில் கொலை செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
மத்தியில் மற்றும் மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க.அரசின் அறியாமை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த அறிவு  குறைபாட்டினால் மாட்டிறைச்சி தடை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒருபடி முன்னேற்றத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டின் சிறுநீர் பினாயிலுக்கு பதிலாக மருத்துவமனையில் பயன்படுத்த வலியுறுத்தப்படுள்ளது. சுஷ்மா சுவராஜ் பகவத் கீதையை தேசிய நூலக அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எந்த ஒரு அடிப்படை இல்லாமல் அசோக மன்னர் குஷ்வா என்ற சாதியை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். அதேப்போல் டெல்லியில் உள்ள அவ்ரங்கசிப் பெயரில் உள்ள சாலையின் பெயரை மாற்றச் செய்துள்ளார்கள்.
அசோக மன்னர் 99 சகோதரர்களை கொன்ற பிறகு தான் ஆட்சி கட்டிலில் ஏறினார் என்று கூறப்படுகிறது. இதற்காக அசோக மன்னரின் பெயரில் உள்ள சாலையை பெயர் மாற்றம்  செய்வோமா?
சாலையின் பெயரை மாற்றம் மாற்றுவதன் மூலம் இசுலாமியர்களின் அடையாளத்தையும் பங்கையும் இந்திய வரலாற்றில் இருந்து துடைத்து எறியவேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம்.
மோடி தலைமையிலான ஆளும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சாதாரண கல்வி தகுதியை கொண்ட நபர்களை தலைமை பதவிக்கு கொண்டுவருவதினால் இந்த நிறுவனத்தின் அஸ்திவாரத்தை தகர்க்கின்றனர். தற்பொழுது இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட  சுதர்சன் ராவ் அவர்களுடைய அறியாமையை அனைவரும் அறிந்ததே. இதேபோல் நேஷனல் புக் டிரஸ்ட்க்கு மலையாள எழுத்தாளர் சேது மாதவனை நீக்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பத்திரிகை பாஞ்சன்யாவின் முன்னாள் ஆசிரியராக இருந்த பால்தேவ் சர்மாவை தலைமை பதவிக்கு கொண்டுவந்தனர். பா.ஜ.க.வில் பொறுப்பு வகிக்கும் தொலைகாட்சியில் மகாபாரத நாடகத்தில்  யுதிஷ்டிரா என்னும் வேடத்தில் நடித்த கஜேந்திர சவ்ஹான் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தின் தலைவராக நியமிக்கபட்டுள்ளதும் இதில் அடங்கும்.
அனுபவம் கொண்ட தலைவர்களை ஒதுக்கி தகுதியில்லாத நபர்களை தலைமைக்கு கொண்டுவருவதினால் அந்த துறையின்  வளர்ச்சி கேள்விக் குறியாகிறது. பிரபல வரலாற்று ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்கள் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.
பிரதமர் மோடி உட்பட ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா கூட்டங்கள் புராதன கதைகளை அறிவியல் முன்னோடியாக கூறி வருகின்றனர். மேற்குலகு  கண்டுபிடிப்பதற்கு முன்னேரே இவர்களிடம் உயிரணு ஆராய்ச்சி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் விமானம் பற்றிய அறிவு இவர்களிடம் இருந்ததாக எவ்வித ஆதாரமும் இன்றி கூறி வருகின்றனர்.
தற்போதைய நாட்டை ஆளும் பா.ஜ.க.ஆட்சி நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவருகிறது. இதேபோல் செயல்பட்டால் பா.ஜ.க. அரசு நாட்டை இருண்ட காலத்திற்கு  இட்டு சென்றுவிடும். மோடி தலைமையில் இந்தியா உலக நாடுகளிடம் பரிதாபத்திற்குரிய அல்லது வெறுப்புக்குரிய, அறியாமை கொண்ட நாடாக விளங்கும்.
தமிழில்:ஆரூர்.யூசுப்தீன்

Comments are closed.