சஞ்சீவ் பட் ஏன் பழிவாங்கப்படுகிறார்?

0

சஞ்சீவ் பட் ஏன் பழிவாங்கப்படுகிறார்?

அரை ஜனநாயகம் எனப்படும் ஜனநாயகமும் சர்வாதிகாரமும் கலந்த அரசுகள், அதாவது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைமுறையில் எதேச்சதிகாரத்துடன் செயல்படும் அரசுகள் தற்போதைய உலகில் உள்ளன. நிர்வகிக்கப்படும் ஜனநாயக தேசம் என்றும் இவற்றை குறிப்பிடலாம். தேர்தலை நடத்தும் அரசுகளே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார்கள். அவையெல்லாம் தேர்தல் மோசடிகளாக இருக்கவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பெரும்பான்மை வாக்குகளை தங்களுக்கு சாதகமாக மாற்றும் தந்திரங்களை அவர்கள் கையாளுவார்கள். அது தேசியவாதமாக இருக்கலாம், போர் வெறியாக இருக்கலாம், இனவாதமாகலாம், மதவாதமாகவும் இருக்கலாம்.

அத்தகைய நாடுகளின் பிரத்யேக தன்மை என்னவெனில் அங்கெல்லாம் எதிர்கட்சிகள் வலுவிழந்து காணப்படும். எதிர் குரல்கள் அடக்கி ஒடுக்கப்படும், அவர்களின் தலைவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள். ஊடக சுதந்திரமெல்லாம் பெயரளவில்தான் இருக்கும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.