சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை

0

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சிதறும் தாமரை

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோராம் மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா, தெலுங்கானாவில் காங்கிரஸின் புதிய கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி என்று அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த பரபரப்பும் இந்த ஆவலுக்கு காரணமாக இருந்தது.

டிசம்பர் 11 அன்று வெளியான தேர்தல் முடிவுகள் இந்திய வரைபடத்தில் பூசப்பட்ட காவி வண்ணத்தை பெருமளவு நீக்கிவிட்டன. நாடு முழுவதும் பெரும்பான்மை மக்கள் இந்த மாற்றத்தை கொண்டாடுவது பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது. பதினைந்து ஆண்டுகள் மத்திய பிரதேசத்திலும் சட்டீஸ்கரிலும் ஆட்சியில் இருந்தாலும் மீண்டும் ஆட்சியை தக்க வைப்போம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் என்ற ராஜஸ்தானின் வரலாற்றை மாற்றுவோம், தெலுங்கானாவில் கடும் போட்டியை கொடுப்போம் என்று மோடி-&அமித் ஷா கூட்டணி தேர்தலுக்கு முன் படபடத்தது. 2014ற்கு பின் நடைபெற்ற பெரும்பான்மை தேர்தல்களில் தங்களுக்கு வெற்றியை கொடுத்த அமித் ஷாவின் சாணக்கியத்தனம் இப்போதும் வெளிப்படும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வெறுப்பு பிரச்சாரத்தை மூலதனமாகக் கொண்டு பிரச்சாரத்தை எதிர்கொண்ட பா.ஜ.க. உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை பிரச்சார கதாநாயகனான களம் இறக்கியது. எழுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்ட பெயர் மாற்ற புகழ் ஆதித்யநாத், தனது விஷ நாக்கை வரைமுறையின்றி நீட்டினார். அவருக்கு இணையாக ஏனையவர்களும் வெறுப்பு கருத்துகளை விதைத்தனர். தேர்தல் பிரச்சார நாட்களிலேயே ராமர் கோயில் விவகாரத்தை கொதி நிலைக்கு கொண்டு வந்தனர். மத்திய பிரதேச தேர்தல் வாக்களிப்பிற்கு மூன்று தினங்களுக்கு முன் அயோத்தியில் தர்ம சபாவை நடத்தியது விஷ்வ இந்து பரிஷத். ‘‘டெல்லி ஜூம்ஆ மஸ்ஜித்தை உடைத்துப் பார்த்தால் கீழே சிலைகளை கண்டெடுக்கலாம். இல்லையென்றால் என்னை உயிருடன் எரியுங்கள்’’ என்று தன் பங்கிற்கு சொல்லி வைத்தார் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்க்ஷி மகாராஜ். ராமர் கோயில், ராமர் சிலை, பட்டேல் சிலை, சபரிமலை, பசு பாதுகாப்பு என்று கூறி வகுப்பு வெறியை தூண்டி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் பா.ஜ.க.வினர் இருந்தனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.