சட்டீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி

0

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்றைய தினம் வெளியான உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. நகர்ப்புறத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் காங்கிரஸ் கட்சி எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முனிசிபல் கார்பரேஷன், நான்கு முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் ஆறு நகர பஞ்சாயத்துகள் இந்த 11 இடங்களில் அடங்கும்.
சென்ற முறை நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஏழு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பிலாய் முனிசிபல் கார்பரேஷனில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வித்யா ரதன் பாசின், காங்கிரஸ் கட்சியின் இளம் வேட்பாளரான தேவேந்திர யாதவிடம் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
நான்கு முனிசிபல் கவுன்சில்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Comments are closed.