சதாம் ஹுசைன் என்ற பெயரால் 40 முறை வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர்

0

நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தில் மரைன் பொறியியல் பாடப்பிறிவில் தேர்ச்சி பெற்றவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சதாம் ஹுசைன். இவர் தனது பணிக்கான நேர்முக தேர்வுகளுக்கு பல முறை விண்ணப்பித்தும் அவரது பெயரின் காரணமாக பணி நிராகரிக்கப்பட்டுள்ளார். தான் தனது வகுப்பில் இரண்டாவது மாணவனாக இருந்த போதிலும் தனது பெயரின் காரணமாக தனக்கு பணி நிராகரிக்கப்படுவதாகவும் தனது வகுப்பை சேர்ந்த பிற மாணவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த போதலும் தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்னை பணிக்கு சேர்க்க அவர்கள் அஞ்சுகின்றனர்.” என்று கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்த சதாம் ஹுசைனுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தான் ஏன் நிராகரிக்கப்படுகிறோம் என்பது குறித்து புரியவில்லை. பின்னர் ஒரு நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையிடம் இது குறித்து அவர் கேள்வி எழுப்பியதற்கு அவரது பெயர் தான் இதற்கு காரணம் என்று பதில் கிடைத்துள்ளது. இந்த பெயர் கப்பலில் பணியாற்றுபவர்களுக்கு ஈராக்கின் முன்னால் ஆட்சியாளர் சதாம் ஹுசைனை தான் நினைவு படுத்தும் என்றும் அதனால் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அவர் நிராகரிக்கப்படலாம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து டெல்லியை மையமாக கொண்ட வேலைவாய்ப்பு  நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், அவரது பணி எல்லைகளை கடப்பதாக இருந்தால் எல்லைப்பாதுகப்பு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ளலாம். இதனால் இவர் தேவையில்லாமல் சோதனைகளுக்கு ஆட்படலாம் அல்லது இவரது நிறுவனம் இவரை இது போன்ற நிலைமையில் இருந்துஅடிக்கடி விடுவிக்க வேண்டியதிருக்கும் என்றும் இதுவே அவர் பணியமர்த்தபடாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இன்னும் ஷாருக்கான் விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது சதாம் ஹுசைனின் ஒப்பீடு அளவில் சிறியது தான் என்று அவர் தேரிவித்துள்ளார்.

தனது பிரச்சனை தன்னுடைய பெயர் தான் என்று தெரிந்ததும் அதனை சாஜித் என்று பெயர் மாற்றம் செய்து அந்த பெயரிலேயே வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ளார் சதாம். ஆனால் அவரது கல்விச் சான்றிதல்களில் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளியின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதல்களில் பெயர் மாற்றம் செய்யப்படாதவரை கல்லூரி சான்றிதல்களில் பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று அவரிடம் கூறப்பட்டுள்ளது. பள்ளி சான்றிதல்களில் பெயர் மாற்றம் செய்ய CBSE ஐ அணுகிய போதும் இதவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சதாம் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். தனது பெயரை மாற்றித் தர CBSE க்கு உத்தரவிடுமாறு சதாம் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இவரது இந்த வழக்கிற்கான விசாரணையை வருகிற மே மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம். தனது நிலை குறித்து அவர் கூறுகையில், “யாரோ செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவிகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.