சத்திஷ்கர் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட தலித்

0

சத்திஷ்கர் மாநிலத்தின் ஜாஞ்கிர் சம்பா பகுதியில் தலித் இளைஞர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொன்ற காரணத்திற்காக நான்கு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தானா பொறுப்பு அதிகாரி ராஜ்புத், காவலர்கள் சுனில் துருவ், ஹில்ஹரன் மிரி, மற்றும் வீட்டுக் காவலர் ராஜேஷ் குமார் என்று அறியப்படுகிறது.

கொல்லப்பட்ட தலித் இளைஞரான சதீஷ் நோர்கே கடந்த செப்டெம்பர் 17 ஆம் தேதி நரியாரா கிராமத்தில் மின்வாரியத் துறை அதிகாரிகளுடன் பழுதடைந்த ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்று குறித்து புகாரளித்தது தொடர்பாக மோதல் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இவரது மரணத்தை தொடர்ந்து அப்பகுதி தலித் சமூக மக்கள் உயர் ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலையில் தொடர்புடைய நான்கு காவல்துறையினரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டு பிலாஸ்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி.அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். இவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் SC/ST கொடுமை தடுப்பு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.