சமகால இஸ்லாமிய உலகம்

0

சமகால இஸ்லாமிய உலகம்

எண்ணெய் அரசியலுக்குப் பலியாகி இன்றுவரை கனன்று கொண்டிருக்கும் இன்னொரு நாடு ஈராக். உஸ்மானியப் பேரரசின் விடுபட்டுப் போன மூன்று துண்டுகளை ஒட்டவைத்து ஈராக் உருவாக்கப்பட்டது. ஏகாதிபத்திய சக்திகள் (பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா) தமக்கு வசதியாக உருவாக்கிக் கொண்ட நாடுதான் ஈராக். காலனிய ஆசைக்காக அவர்கள் வரைந்து கொண்ட சில கோடுகள் அவை. 1930களிலேயே ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீது மேற்கத்திய சக்திகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. ஈராக்கியர்களை அடிபணிய வைப்பதற்கு அதன்மீது குண்டுமழை பொழிந்தார்கள்.

விமானப் படையைப் பயன்படுத்துவது குறித்து பிரிட்டனின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன வாக்கியம் இன்னும் இப்பிராந்தியத்தில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றது. ‘‘முரட்டுத்தனமான ஆதிக்குடிகளுக்கெதிரான தொடக்க நடவடிக்கைகளில் இரசாயன வாயுவைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படுமே தவிர மரணம் நிகழாது’’ என்று அவர் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளுக்குப் பின்னர் 1980கள் மற்றும் வளைகுடா போர் நடந்த 1990கள் என ஈராக் எப்போதும் மேலைய நாடுகளின் குறியாகவே இருந்து வந்தது.

2003ல் ஈராக் மீதான நவீன ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்தது. 9-/11 தாக்குதலை அடுத்து ஆப்கானின் தோரா போரா மலைத்தொடர் ஊடே பக்தாதிற்கான பாதை உருவாக்கப்பட்டது. அவ்வருடம் மார்ச் மாதம் அமெரிக்க விமானப் படை பக்தாத் மீது குண்டுமழை பொழிந்தது. ஈராக்கை அவர்கள் ஏன் ஆக்கிரமித்தார்கள் என்பது இப்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றது. புஷ்ஷும் பிளேயரும் முன்வைத்த நியாயங்கள் போலியானவை என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஈராக் ஏன் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ராபர்ட் பிஸ்க் என்பவரின் போரெதிர்ப்பு இயக்கத்திற்கான இணையதளமொன்றின் உரையாடலிலிருந்து சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். போர் ஆதரவு பிரச்சாரத்திற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் போரைத் தொடங்க முன்னர் பாடசாலை ஒன்றுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு தன் உரையை முடித்த ஜார்ஜ் புஷ் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாரானார். பாப் என்ற மாணவன் எழுந்து ஜனாதிபதி அவர்களே ‘என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன’ என்று கேள்விகளை ஆரம்பித்தான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.