சமகால இஸ்லாமிய உலகம்

0

சமகால இஸ்லாமிய உலகம்

இன்று பெட்ரோலியம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பண்டமென்றே பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். துரதிஷ்டவசமாக இன்று பெட்ரோலியத்தின் விலை நிர்ணயம் சுதந்திர சந்தையினால் நடைபெறுவதில்லை. மாறாக அதனைச் சுற்றியுள்ள இராணுவ, அரசியல் வலையங்களினால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எண்ணெய் வயல்களின் சொந்தக்காரர்களும் உரிமையாளர்களும் ஒதுங்கியிருக்க உலகளவில் மிகப் பெரிய பெட்ரோலிய சந்தைகள் நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் ஆகிய மூன்று இடங்களில் உள்ளன.

எந்தவொரு நாடும் பெட்ரோலியத்தைக் கொள்வனவு செய்வதற்கு சந்தைக்குச் சென்றால் 5 அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களே சந்தையின் ஏகபோக விற்பனையாளர்கள் என்பது தெரிய வரும். நைபெக்ஸ் குரூட் பியூச்சர், டேடட் பிரன்ட் பியூச்சர், கீஜிமி கசின் ஸ்பாட், நைமெக்ஸ் ஹீடிங் ஆயில் பியூச்சர், நைமெக்ஸ் ஸிஙிளிஙி கசோலைன் பியூச்சர் என்பனவே அவை.

இவர்களுக்கு எண்ணெய் வழங்கும் நிறுவனங்களும் உலக உற்பத்தியில் 90 சதத்தைக் கையில் வைத்திருக்கும் மாபெரும் ஆங்கில அமெரிக்க -டச்சு நிறுவனங்களான எக்ஸோ மொபைல், ராயல் டச் செல், பீபீ சேவரன் டெக்ஸோ கா ஆகியன. உலகின் பல நாடுகளின் எண்ணெய்க் கிணறுகளையும் சுத்திகரிப்பு ஆலைகளையும் இராணுவ உதவியுடன் இவர்கள் கையில் வைத்திருக்கின்றனர். அவர்கள் கோரும் விலையை கொடுத்துத்தான் பெட்ரோலியத்தை வாங்க முடியும். பெரும்பாலும் இந்நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் பங்கு மூலதனங்களால் இயங்குகின்றன. அம்மக்களின் பென்சன் நிதி முதல் தனிநபர் சேமிப்பு வரை இதில் முடக்கப்பட்டுள்ளன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.