சமகால இஸ்லாமிய உலகம்

0

உலகம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது? என்ற விவாதம் இன்னும் முழுமை பெறவில்லை. அபிப்பிராய பேதங்களுடன் அந்த விவாதம் நம்மைக் கடந்து செல்கின்றது. இன்று மனித குலத்திற்கு முன்னால் விடையின்றித் தொடரும் அதி முக்கிய கேள்விகளில் ஒன்று இந்த உலகை எப்படி புரிந்து கொள்வது என்பதுதான். பின் கைத்தொழில் சமூகம், பின் காலனித்துவ சூழல், பின் நவீனத்துவ சமூகம் என ஒவ்வொன்றையும் கடந்து செல்லும் உலக அரசியல் மிகுந்த சிக்கல்களால் பிணைக்கப்பட்டுள்ளது.

பிபிசி&யும் சி.என்.என்&யும் காட்டுவதே உலகம் என்று நம்பும் மக்கள் தொகை பெருகி வருகின்றது. இங்கே ஊகங்கள், இருன்மைகளை விலக்கி உலகைப் பார்ப்பது எப்படி என்பது அநேகமானோருக்கு சிக்கலாகவே உள்ளது. இதற்கான காரணம் இப்போது நாம் உண்மையைத் தாண்டிய அரசியல் சூழலில் வாழ நேரிட்டுள்ளமைதான். யதார்த்தங்கள், உண்மைகள், உண்மைத் தரவுகள் என்பவற்றைக் கடந்து பொய்களையும் போலிகளையும் உண்மைகளாய் உறுதிப்படுத்தி மக்களை நம்பச் செய்யும் அரசியல் தந்திரம் கனகச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஊடகங்களும் வாடகை ஆய்வாளர்களும் மக்களின் சமூக உளவியலை மோசமாகத் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

இன்றைய அரபு இஸ்லாமிய உலகைப் புரிந்து கொள்வதும் இது போன்ற சவாலை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச அரசியல் செல்நெறிகளையும் உள்ளூரில் அவற்றின் தாக்கத்தையும் புரிந்து கொள்வதில் நாம் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது உண்மையைக் கடந்த ஒரு கட்டுக்கதை. அதை நம்பவைக்கும் களச் செயற்பாடுகளில் ஏகாதிபத்தியச் சக்திகள் அரங்கேற்றும் கபட நாடகங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.

இஸ்லாமிய உலகம் முழுவதிலும் பல்வேறு பெயர்களிலான ஆயுதக் குழுக்கள் வெவ்வேறுபட்ட மூலோபாயங்களுடன் செயற்படுகின்றன. ஆப்கான், பாகிஸ்தான் எல்லைகளில் போராடும் தாலிபான்கள், ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள ஐ.எஸ்., நைஜீரியாவின் போகோ ஹராம், மாலியின் அன்ஸாருத் தீன், சோமாலியாவின் அஷ்ஷபாப், உலக வலைப்பின்னலுடன் இயங்குவதாகக் கூறப்படும் அல்காயிதா என்பவற்றின் இராணுவ செல்நெறிகளையும் பின்னாலுள்ள இயங்கு சக்திகளையும் புரிந்து கொள்வதில் புதிய சிக்கல்கள் தோன்றியுள்ளன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.