சமரசமில்லா போராளி SAR ஜீலானி

0

சமரசமில்லா போராளி SAR ஜீலானி

அதிகாரத்தில் உள்ளவர்களின் அத்துமீறல்களை அச்சமின்றி கேள்வி எழுப்புபவர்களின் இறந்த உடல் கூட அதிகார போதை ஏறியவர்களுக்கு உதறல்களை  உண்டாக்கும் என்பதற்கு வரலாறும் சம காலமும் சான்றுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் கஷ்மீர் பேராசிரியர் சையத் அப்துர் ரஹ்மான் ஜீலானி. அக்டோபர் 24 அன்று டெல்லியில் உடற்பயிற்சி கூடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த அவரின் உடலை குடும்பத்தினரிடம் உடனடியாக ஒப்படைக்காமல் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்தினர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் கஷ்மீர் பேராசிரியரான ஜீலானி, நாட்டையே உலுக்கிய, இதுவரை விடை தெரியாத நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். மேல்முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்தது, உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியது.  ஆனால் இந்த குற்றச்சாட்டிற்காக ஜீலானி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வழக்கமான, கொடூர சித்திரவதை செய்யப்பட்டார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.