சமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்

0

சமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பல சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை பீமா கோரேகான் கலவரத்தை (8 மாதம் முன்பு நடந்த) மேற்கோள்காட்டி மகாராஷ்டிரா காவல்துறை யு.ஏ.பி.ஏ. UAPA (The Unlawful Activities Prevention Act) சட்டத்தின்கீழ் கைது செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட ஐந்து சமூக ஆர்வலர்கள் மகாராஷ்டிரா காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும் ஒருதலைபட்சமான விசாரணையையும் கேள்வி எழுப்பி அவ்வழக்கை சுதந்திரமான முறையில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களை பிணையில் விடுவிக்க வேண்டியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவாக கைது செய்தவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. (இது தொடர்பாக புதிய விடியல் செப்டம்பர் 1&15 இதழில் விரிவான கட்டுரை வந்துள்ளது)

செப்டம்பர் 28ஆம் தேதி இறுதித் தீர்ப்வை வழங்கிய நீதிபதிகள், சமூக ஆர்வலர்களை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்க மறுத்தனர். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை பினைக்காக அணுகலாம் என்று உத்தரவிட்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.