சமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்

0

சமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்

தலித் – முஸ்லிம் கலந்துரையாடலில் முடிவு

அக்டோபர் 12, 2019 அன்று பெங்களூரின் இந்தியன் சோசியல் இனஸ்டிடியூட்டில் நடைபெற்ற ஒரு நாள் வட்ட மேஜை கலந்துரையாடலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைக்கப்பட்ட தலைவர்களும் அறிவுஜீவிகளும் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர்களுடன் கலந்து கொண்டனர். முக்கிய தலித் எழுத்தாளரும் ‘தலித் வாய்ஸ்’ பத்திரிகையின் நிறுவன ஆசிரியருமான வி.டி.ராஜசேகர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா கலந்து கொண்டவர்களை வரவேற்றார். தேசிய செயலாளர் அனீஸ் அகமது முக்கிய உரையை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

அடிமட்ட அளவில் சமூக கூட்டணியை கட்டமைப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு பொதுவான பிரச்சனைகளை எதிர் கொள்ள கூட்டு உத்திகளை வெளிப்படுத்துவதற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு செய்த தலித் – முஸ்லிம் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் உறுதி பூண்டனர்.

Comments are closed.