சமூக வலைதளத்தில் மதவாத கருத்தை பகிர்ந்த பெண்: குர்ஆனை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவு!

0

ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ரிஷா பார்தி என்ற பெண், மத ரீதியிலான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பார்தி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்றம் அப்பெண்ணிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் குர்ஆனின் 5 பிரதிகளை விநியோகிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் ஓரு குர்ஆனை அஞ்சுமான் இஸ்லாமிய குழுவிடம் வழங்கவும், மற்ற நான்கு குர்ஆனை பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் வைக்கவும் உத்தரவிட்டது.

இதுக் குறித்து கருத்து தெரிவித்த ரிஷா பார்தி: “நீதிமன்றத்தின் இந்த  தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. நாளை ஒருவேளை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட சொல்லலாம்” என்று தெரிவித்தார்.

பார்திதியின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், சிலர் அதற்கு எதிராக போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.