சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு

0

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, சிலிண்டர் ஒன்றிற்கு 86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கள் சிலிண்டர்களுக்கான மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள் அல்லது வருடத்திற்கு 12 சிலிண்டர் கணக்கை தாண்டியவர்கள் தற்போது சிலிண்டர் ஒன்றிற்கு 737.50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். முன்னதாக இந்த விலை 14.2 கிலோ சிலிண்டருக்கு 651.50 ரூபாய் என்று இருந்தது.

தற்போதைய இந்த விலை ஏற்றம் இந்திய வரலாற்றில் அதிகப்படியான விலையேற்றம் என்று கூறப்படுகிறது. கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் இருந்து எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்முகமாகவே உள்ளது. செப்டம்பர் மாதம் மானியம் அல்லாத சிலிண்டர்களின் விலை டில்லியில் 466.50 ரூபாயாக இருந்தது 271 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது ஆறு விலையேற்றங்கள் மூலமாக ஒரு சிலிண்டரின் விலை 58% அதிகரித்துள்ளது.

மானிய எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் என்னை நிறுவனங்கள் 13 பைசா உயர்த்தியுள்ளனர். இந்த விலையேற்றத்திற்கு முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எட்டு முறை ரூபாய் 2 என விலையேற்றம் கண்டுள்ளது.

விமான எரிபொருளின் விலையும் ஒரு கிலோ லிட்டருக்கு 214 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 54,293.38 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும், முந்தைய மாதத்தின் எண்ணெய் விலை மற்றும் அணியச் செலவாணியை கணக்கில் கொண்டு சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போதையை இந்த விலை ஏற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த விலையேற்றம் சர்வதேச சந்தை விலைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மானியம் பெருபவர்களுக்கு இந்த விலையேற்றத்தினால் தற்போது எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது மானியம் வாங்குபர்வர்கள் ஒரு சிலிண்டருக்கு 737 ரூபாய் பெற்று பின்னர் தங்கள் கணக்கில் 303 ரூபாய் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் சிலிண்டர் ஒன்றின் மானிய விலை 434 ரூபாயாக இருக்கும்.

Comments are closed.