சமையல் எரிவாயு மானியம்: 1 லட்சம் பேர் மீண்டும் மானியம் பெற விண்ணப்பம்

0

கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடி நாட்டில் வசதி படைத்தவர்கள் தங்களின் சமையல் எரிவாயு மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து அணில் அம்பானி தொடங்கி பலர் தங்களின் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தனர்.

தற்போது ஹிசார் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான துஷ்யந்த் சவ்தலா என்பவர் மக்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சரை நோக்கி ஒரு எழுப்பினார். அதில் சமையல் எரிவாயு விட்டுக்கொடுத்தவர்களுக்கு ஒரு வருடம் கழிந்த பின்னர் மீண்டும் அந்த மானியத்தை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்பட்டது எனில் எத்தனை பேர் அதனை பயன்படுத்தி தங்களது சமையல் எரிவாயு மானியத்தை திரும்பப் பெற்றுள்ளனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த தகவல்களை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதர்கான கால அவகாசம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து இந்த கேள்விகளுக்கு  பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதிலளித்துள்ளார். அதில் சமையல் எரிவாயு மானியத்தை தாங்களே முன் வந்து விட்டுக் கொடுத்தவர்களுக்கு ஒரு வருட காலம் முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் அதனை பயன்படுத்தி 112655 மக்கள் தங்களது சமையல் எரிவாயு மானியத்தை திரும்பப்பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலம் வாரியாக கொடுக்கப்பட்ட தகவலின்படி பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 22984 மக்கள் தங்களது சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் பெற விண்ணப்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 13552 பேரும், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் 9955 மக்களும், தமிழகத்தில் மொத்தம் 7681 மக்களும் தங்களது மானியத்தை திரும்பப் பெற விண்ணப்பித்துள்ளனர்.

மக்களின் இந்த முடிவிற்கு மானியமல்லாத சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்ததே காரணம் என்று தெரிகிறது. கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 86 ரூபாய் உயர்த்தப்பட்டது. LPG சிலிண்டர்களின் விலை கடந்த 2016 செம்படம்பர் மாதத்தில் இருந்து ஏறுமுகமாகவே உள்ளது. செப்டெம்பர் 2016 இல் 466.50 ரூபாய்களாக இருந்த மானியமல்லாத சிலிண்டரின் விலை ஆறு தவணைகளாக விலை உயர்த்தப்பட்டு தற்போது 271 ரூபாய் அதிகரித்துள்ளது.

மேலும் பலர் தங்களின் சமையல் எரிவாயு மானியம், சிலிண்டர் முன்பதிவு செய்ய அழைக்கப்படும் தொலைபேசி அழைப்பில் உள்ள தவறினால் ரத்தாகிவிட்டது என்று கூறியுள்ளனர். சிலினர் முன்பதிவு செய்யும் தொலைபேசி அழைப்பின் போது வரும் IVR எனப்படும் கணினித் தேர்வு முறையில் உள்ள குளறுபடியால் தவறுதலாக தங்களின் மானியம் விட்டுக்கொடுத்ததாக கணக்கிடப்பட்டது என்று அவர்கள் கூறியிருந்தனர். எரிவாயு முன் பதிவின் போது நீங்கள் தவறுதலாக எண் பூஜியத்தை அழுத்தினாலும்  தங்களின் மானியம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கணக்கிடப்பட்டது என்று கூறியிருந்தனர். இது போன்று தவறுதலாக தங்களது மானியத்தை இழந்தவர்களும் தற்போது ஏற்பட்டுள்ள விலையேற்றத்தினால் தங்களது மானியத்தை திரும்பக் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

சமையல் எரிவாயு மானியத்தை திரும்பப் பெற்றவர்களின் மாநில வாரியான எண்ணிக்கை:

Comments are closed.