சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: பாகிஸ்தான் பெண் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

0

2007ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் அசிமானந்தா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததை எதிர்த்து பாகிஸ்தான் பெண் ஒருவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த தீவிரவாத தாக்குதலில் 68 பேர் உட்பட 10 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்ச் 20ஆம் தேதி பஞ்குலாவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதுக்குறித்து கூறிய நீதிமன்றம்: “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க என்ஐஏ தவறிவிட்டது” என தெரிவித்தது.

டெல்லியில் இருந்து லாகூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, ​​பானிபட் அருகே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தானியரான முகமது வக்கீல். அவரது மகள் ரஹிலா வக்கீல் இந்த வழக்கை மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஹிலா வக்கில், உத்தரபிரதேசத்தில் ஷாம்லியில் வசிக்கும் தனது மாமா மஹ்ரூப் மூலம் இந்த மேல்முறையீடை செய்தார்.

Comments are closed.