சர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்

0

சர்சையாகும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனம்

ஒய்வு பெற்ற நீதிபதிகள் ஆளுநர், பல்வேறு ஆணையங்களின் பதவிகள் ஆகியவற்றிற்கு நியமிக்கப்படுவது நீண்ட கால வழக்கமாகவே உள்ளது. ஆரம்பம் முதல் இன்று வரை இந்த நியமனங்கள் தொடர் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றன.

இந்த சூழலில் பா.ஜ.க. அரசு மத்தியில் பொருப்பெற்ற காலம் முதல் இன்று வரை நீதிபதிகள் ஓய்வு பெற்ற சில நாட்களிலேயே அரசு பதவிகளுக்கு நியமிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. நீதிபதி சதாசிவம், நீதிபதி ஆர்.கே. அகர்வால் ஆகியோரின் நியமனங்களை தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 6ம் தேதி பணி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோயல் அதே தினத்தில் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற அதே தினத்தில் நீதிபதி கோயலுக்கு பதவி வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி அந்தோனி டொமினிக் பதவி ஓய்வு பெற்ற ஒரே வாரத்தில் அவரை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமித்தது கேரளா அரசு.

பதவி ஓய்வு பெறும் நீதிபதிகள் இவ்வாறு உடனடியாக வேறு அரசு துறைகளில் நியமிக்கப்படுவது நீதித்துறையின் தனித்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஓய்விற்கு பிறகு அரசு பதவிகளை பெறுவதால் பணிக் காலத்தில் இவர்கள் தவறிழைத்திருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் மக்கள் மனதில் அவை சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. ரோஜர் மேதிவ் எதிர் சவுத் இந்தியன் வங்கி வழக்கில் இத்தகைய ஆணையங்களின் மறு கட்டமைப்பு குறித்த வழக்கை நீதிபதி கோயல்தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அமிகஸ் கியூரேயாக (நீதிமன்றத்திற்கு வழக்கில் உதவி செய்யக் கூடியவர்) நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பி. தாடர், ‘ஆணையங்கள் ஓய்வு பெற்றவர்களின் புகலிடங்களாக இருக்கக் கூடாது. அரசாங்கமே வாதியாகவும் நியமனம் செய்யக் கூடியவராகவும் இருக்கும் பட்சத்தில் நியமனங்கள் தீர்ப்புகள் மீது ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கக் கூடாது’ என்று கூறினார். அமிகஸ் கியூரேயின் இந்த வாதத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வு கூறியது. ஆனால் தற்போது அதே கோயல், பதவி ஓய்வு பெற்ற அதே நாளில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டது மிகப்பெரும் முரண்பாடாக இருக்கிறது. பா.ஜ.க. வழக்கறிஞர் அணியின் பொதுச் செயலாளராக கோயல் பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தருணத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் நியமனதில் ஏறபடும் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் குறித்தும் இது தொடர்பாக முன்னாள் நீதிபதிகளின் கருத்துகளையும் நாம் நோக்கலாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.