சர்வாதிகாரத்தால் வீழ்த்தப்பட்ட முர்ஸி!

0

சர்வாதிகாரத்தால் வீழ்த்தப்பட்ட முர்ஸி!

‘சுதந்திரத்தின் விலை மரணம்…’

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் கூறிய வார்த்தைகள் இவை. சுதந்திரத்தையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக தன்னுயிரை ஈந்தவர்களின் எண்ணிக்கை சங்கிலித் தொடராக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் எகிப்தின் அதிபர் முகம்மது முர்ஸி. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் முர்ஸி. இந்த அதிபரைத்தான் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைத்து, இல்லாத பல குற்றங்களை சுமத்தி, தண்டனைகளை அள்ளி வழங்கி, சித்திரவதை செய்து, இறுதியாக கொலையும் செய்துள்ளது தற்போது அதிகாரத்திலுள்ள இராணுவ அரசாங்கம். ஜூன் 17 அன்று நீதிமன்ற விசாரணையின் போது பேசிக்கொண்டிருந்த முர்ஸி, திடீரென நிலைகுலைந்து மரணித்த போது அதனை இயற்கை மரணம் என்றழைக்க மனசாட்சியுள்ளவர்கள் விரும்பவில்லை.

ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முர்ஸிக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைகளை கொடுத்தனர் தற்போதைய அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல் சீசி மற்றும் அவரின் அடியாட்கள். நோய்கள் தாக்கப்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த முர்ஸிக்கு போதிய மருத்துவ வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.