சலுகைசார் முதலாளித்துவம்

0

சலுகைசார் முதலாளித்துவம்

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மீது அதிக வரி விதிக்கப்படுகின்றது. மக்களுக்கு அளிக்கப்படும் எரிவாயு மற்றும் குடிமைப்பொருளுக்கான மானியங்கள் குறைக்கப்படுகின்றது அல்லது நீக்கப்படுகின்றது. வெகு சில பெருமுதலாளிகள் பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியும், சில ஆயிரம் கோடி வரி தள்ளுபடியும் பெறுகின்றனர். பா.ஜ.க. ஆட்சி சித்தாந்த ரீதியில் ஒரு பாசிச ஆட்சி என்கிற கருத்து பரவலாக வலுப்பெற்று வரும் நிலையில், பாசிசமும் முதலாளித்துவமும் கைகோர்த்துக்கொண்டு இன்று மக்களின் உரிமைகளையும் பொருளாதாரத்தையும் சுரண்டிக்கொண்டு இருக்கின்றது என்பதனையே இவை பறைசாற்றுகின்றன. குறிப்பாக மோடி அரசிடம் அதிக சலுகை பெரும் பெருமுதலாளிகள் சில குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தை சார்ந்தவர்களாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த நபர்களாகவோ இருப்பதை நாம் காண முடிகின்றது.

சமூக பொருளாதார அறிஞர்கள் இதனை “சலுகைசார் முதலாளித்துவம்” (Crony Capitalism) என அழைக்கின்றனர். அரசு சார்ந்த மற்றும் சாராத வர்த்தக ஒப்பந்தங்களும், அது சார்ந்த அரசின் பல ஆயிரம் கோடி சலுகைகளும் தனக்கு வேண்டிய நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தகுதிபாராமல் அளித்தலே சலுகைசார் முதலாளித்துவம் எனப்படும்.

ஆளும் வர்க்கமும் அவர்களுக்கு ஆதரவான நட்பு வட்டாரத்தில் உள்ள முதலாளி வர்க்கமும் கள்ளக்கூட்டணி அமைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சலுகைகள் பல பெற்று, நாட்டை கொள்ளை அடித்து தங்கள் வளங்களை பெருக்கிக்கொள்வதே சலுகைசார் முதலாளித்துவம்.

பெருமுதலாளிகளுக்கு நாட்டின் இயற்கை கனிமவளங்களை வரைமுறை இல்லாமல் கொள்ளை அடிப்பதற்கான உரிமங்கள் வழங்குதல், ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களை சொற்ப விலைக்கு விற்றல் அல்லது குத்தகைக்கு கொடுத்தல், எவ்வித உத்தரவாதமும் இன்றி ஆயிரக்கணக்கான கோடி வங்கிக்கடன் வழங்குதல், அவற்றில் ஒரு பகுதியை வாராக்கடன் என வகைப்படுத்தி தள்ளுபடி செய்தல், வரி சலுகைகள் அளித்தல்… இவை பா.ஜ.க. ஆட்சியில் சாதாரண நிகழ்வுகளாகும். இவையே சலுகைசார் முதலாளித்துவத்தின் குறியீடுகளாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

Comments are closed.