சவுதி அரேபியாவில் ஊழல் புகாரில் 11 இளவரசர்கள் கைது

0

சவுதி அரேபியா அரசின் முக்கிய பதவிகள் வகிக்கும் நபர்கள் உட்பட சவுதியில் 11 இளவரசர்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பின் தலைமை பதவி வகித்து வந்த இளவரசர் வர்த்தக அமைச்சர் ஆகியோர் சவூதி அரசின் அதிரடி நடவடிக்கை மூலம் மாற்ற செய்யப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு பாதுகாப்புத்துறை அமைச்சரான மன்னர் சல்மானின் மகன் முஹம்மத் பின் சல்மானிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் Kingdom Holding Company என்ற நிறுவனத்தின் தலைவரும் பிரபல சவூதி தொழிலதிபருமான இளவரசர் அல் வலீத் பின் தலால் முக்கிய இளவரசர்கள் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தி வெளியிட்ட சவுதியின் அல் அரேபியா செய்தித் தொலைகாட்சி, இந்த நடவடிக்கையில் 11 இளவரசர்களும் பல முன்னாள் அமைச்சர்களும் புதிய ஊழல் தடுப்பு விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் தடுப்பு பிரிவிற்கு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த ஊழல் எதிர்ப்பு குழுவிற்கு பிடி ஆணை பிறப்பிக்கவோ, போக்குவரத்து தடை பிறப்பிக்கவோ, வங்கிக் கணக்குகளை முடக்கவோ, பண பரிமாற்றங்களை தடுக்கவோ அல்லது கையகப்படுத்தவோ அத்தனை உரிமைகளும் உண்டு என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்திடம் பரிந்துரை செய்யப்படும் வரை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கக் இந்த குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

சில நபர்கள் மக்கள் நலனை காட்டிலும் தங்களது நலனிற்கு முன்னிலை கொடுப்பதும் மக்கள் பணத்தை திருடி வருவதாகவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று சவூதி அரசு உத்தரவு தெரிவித்துள்ளது.

Comments are closed.