சவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்..!

0

சவுதி அரேபியாவின் இளவரசரும் தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரருமான பந்தர் பின் அப்துல்லா அஜிஸ் காலமானார். அவருக்கு வயது 96.

மறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா அஜிஸ் அல் சவுத்தின் மூத்த மகனான இளவரசர் பந்தர் பின் அப்துல் அஜிஸ், 1923 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போதைய மன்னர் சல்மானின் மூத்த சகோதரரான இவர், எந்த பதவியையும் ஏற்காமல் இருந்தவர்.

இளவரசர் பந்தர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரபு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.