சவூதி அரேபியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயலும் இஸ்ரேல்

0

கத்தார் உடனான உறவுகளை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது சவூதி அரேபியா உடனான தனது உறவில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இஸ்ரேல் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

கத்தார் மீதான தடைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் இஸ்ரேலிய எதிர்ப்பு மற்றும் ஃபலஸ்தீனிய ஆதரவு என்றும், கத்தார் மீதான தடையில் கத்தாரை விட அதிகம் பாதிக்கப்பட்டது ஃபலஸ்தீன மக்கள் தான் என்றும் செய்திகள் வெளியாகின. தற்போது இஸ்ரேலின் மற்றும் சவூதி அரேபியா ஆகய இரு நாடுகளின் உறவை புதுப்பிக்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மத் பின் சல்மானை இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் இஸ்ரேலுக்கு அழைத்துள்ளார். மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை மன்னர் சல்மான் ரியாத்திற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துமாறும் இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே முழுமையான ராஜாங்க உறவை நிறுவுமாறும்  இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய தலைவர்கள் தங்களின் தேசிய ராஜதந்திர முயற்சிகளை விவாதிக்கும் நிகழ்சி ஒன்றில் பேசிய இஸ்ரேலிய அமைச்சர் கட்ஸ், சவூதி பட்டத்து இளவரசரை இஸ்ரேலுக்கு அனுப்புவது மூலம் இந்த இருநாடுகளின் எதிரியாக கருதப்படும் ஈரானை எதிர்ப்பது எப்படி என்பது தொடர்பாக விவாதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “நான் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹுவை சவுதிக்கு அழைக்குமாறு மன்னர் சல்மானை கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும் “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சவூதி பயணத்தின் போது நீங்கள் எவளவு சிறந்த உபசரிப்பாளர்கள் என்பதை நாங்கள் கண்டோம். நீங்கள் உங்கள் வாரிசையும் இங்கு அனுப்பலாம். அவர் மாற்றத்தை முன்னோக்கும் நபர்.” என்று கூறியுள்ளார்.

இதோடு இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டோர் லிபெர்மேனும் அரபு நாடுகளுடனான முழு ராஜாங்க மற்றும் பொருளாதார உறவை நிறுவ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஃபலச்தீனியர்களுடன் அமைத்தி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு முன்பாக, இஸ்ரேல் மிதமான அரபு சுன்னி நாடுகளுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். முன்னாதாக இவர் ஃபலஸ்தீனியர்கள் ஃபலஸ்தீனை விட்டு வெளியேற அவர்களுக்கு பணம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்தவர். இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளிடையே ராஜாங்க மற்றும் பொருளாதார உடன்படிக்கை ஏற்பட்டால் அது இஸ்ரேலுக்கு 45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருவாயை இஸ்ரேலுக்கு ஈட்டித்தரும் என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஃபலஸ்தீனிய தேசிய முயற்சி அமைப்பை சேர்ந்த முஸ்தஃபா பர்கவ்தி கூறுகையில், இஸ்ரேலின் இந்த அழைப்பை சவூதி அரேபியாவோ அல்லது பிற அரபு நாடுகளோ ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.  “இது மிக முக்கியமான பிரச்சனை. ஜெருசலேம் மிக முக்கியமான பிரச்சனை. முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான மஸ்ஜிதுல் அக்ஸாவை அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் போது சவூதி இஸ்ரேலுடன் எவ்வாறு சாதாரணமாக உறவுகளை வைத்துக்கொள்ள முடியும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஃபலஸ்தீனிய பிரச்சனைகளை தீர்க்காமல் அரபு உலகுடன் இஸ்ரேல் உறவு மேற்கொண்டால் உலகம் ஃபலஸ்தீன பிரச்சனை குறித்து மறந்துவிடும் என்று இஸ்ரேல் எதிர்பார்கின்றது.” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் இஸ்ரேல் உடன் சராசரி ராஜாங்க உறவை வைத்துக்கொண்டால் தத்தமது நாட்டு மக்களைக் கூட இந்த நாடுகள் சமாதானப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த முயற்சி அமெரிக்கக் அதிபர் டிரம்பின் சவூதி பயணத்தை இயன்றளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற

Comments are closed.