சவூதி பத்திரிகையாளர் படுகொலை: கன்சுலேட்டா? கொலைக்களமா?

0

சவூதி பத்திரிகையாளர் படுகொலை: கன்சுலேட்டா? கொலைக்களமா?

அக்டோபர் 2… அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்திற்குள் செல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் கட்டுரையாளருமான தாமஸ் ஃபிரீட்மென். சவூதி செல்வதற்கான விசாவை விண்ணப்பித்தவர் சில நிமிடங்களில் விசாவையும் பெற்றுக் கொண்டு சிரித்த முகத்துடன் தூதரகத்தில் இருந்து வெளியே வருகிறார். அதே தினத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணை தூதரகத்திற்குள் மதியம் 1:14 மணிக்கு செல்கிறார் சவூதியை சேர்ந்த பத்திரிகையாளரும் வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளருமான ஜமால் கஷோக்ஜி. தனது திருமண விவாகரத்து குறித்த சில ஆவணங்களை பெறுவதற்காக தனது நாட்டின் கன்சுலேட் எனப்படும் துணை தூதரகத்திற்கு சென்ற கஷோக்ஜி அதன் பின் வெளியே வரவேயில்லை. ஜமால் விரைவில் வெளியே வருவார், அவருடன் தனது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று வெளியே காத்துக் கொண்டிருந்தார் துருக்கியை சேர்ந்த அவரின் வருங்கால மனைவி ஹாடிஸ் ஜென்கிஸ்.

கன்சுலேட்டில் இருந்து தான் வருவதற்கு தாமதமானால் துருக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு ஹாடிஸிடம் கூறியிருந்தார் ஜமால். அதன்படி தகவலை துருக்கி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார் ஹாடிஸ். அதன் பின் வெளிவந்த தகவல்கள் நம்பமுடியாதவை, இரத்தத்தை உறைய வைப்பவை. கன்சுலேட்டிற்குள் சென்ற ஜமால் கஷோக்ஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாகவும் அதன் பின் அவரின் உடல் பல கூறுகளாக வெட்டப்பட்டதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை துருக்கி அதிகாரிகள் முன்வைத்தனர். கஷோக்ஜியை கொலை செய்ய சவூதியில் இருந்து 15 நபர் கொண்ட பிரத்யேக கொலைக் கும்பல் சவூதியில் இருந்து துருக்கிக்கு வந்து கொலையை முடித்துவிட்டு சவூதிக்கு திரும்பியதாகவும் துருக்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தது. தனது விவாகரத்து தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 28 அன்று கோரிய கஷோக்ஜி, அக்டோபர் 2 அன்று வர சொன்னதன் காரணமாக மீண்டும் கன்சுலேட் சென்றார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று துருக்கி கூறியது. கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் துருக்கி கூறியது.

இந்த குற்றச்சாட்டுகளை சவூதி முற்றிலுமாக மறுத்தது. கன்சுலேட்டிற்கு வந்த கஷோக்ஜி சில நிமிடங்களில் வெளியே சென்றுவிட்டதாகவும் அவரின் நலன் குறித்து தங்களுக்கும் அக்கறை இருப்பதாகவும் சவூதி துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் கழித்து புளும்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் இதையே தெரிவித்தார். கஷோக்ஜி கன்சுலேட்டை விட்டும் வெளியே சென்றதற்கான கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிடுமாறு துருக்கி கேட்ட போது, தங்கள் கன்சுலேட்டில் கண்காணிப்பு கேமராகளில் பதிவு செய்யும் வசதி இல்லை என்று கேவலமான ஒரு பதிலை சவூதி கன்சுலேட் கூறியது! கஷோக்ஜி உள்ளே செல்லும் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராகளில் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவர் வெளியே செல்லும் காட்சி எந்த கேமராவிலும் பதிவு செய்யப்படவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.