சவூதி மன்னர் அப்துல்லாஹ் மறைவுக்கு ISF இரங்கல்!

0
தம்மாம்: அரபு வளைகுடா பிராந்தியத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் கடந்த பத்து ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் மன்னராகவும் திகழ்ந்த அப்துல்லாஹ் அவர்களின் மறைவு வளைகுடா பிராந்தியத்திற்கே பேரிழப்பாகும்.

தனது சீரிய முயற்சியில் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்தியவர்.

முன்பொரு முறை தாம் சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண சுகம் பெற்று வீடு திரும்பியதும் தமக்காக பிரார்த்தனை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க ஆணை பிறப்பித்த அவரது மனித நேயம் பாராட்டிற்குரியதாகும்.

உலக முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தரும் ஹாஜிகளின் சௌகரியம் கருதி பல்வேறு விரிவாக்க பணிகளை மேற்கொண்ட மன்னரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், சவூதிவாழ் மக்களுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) கிழக்கு மாகாண தமிழ் பிரிவு தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.

மறைந்த மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் பிழை பொறுத்து அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க வல்லோன் அல்லாஹ்விடம் இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.

தலைவர்/பொதுச் செயலர்/உறுப்பினர்கள்
இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) தமிழ் பிரிவு
கிழக்கு மாகாணம்-சவூதி அரேபியா

Comments are closed.