சாதனை படைத்த நோன்பாளி

0

சாதனை படைத்த நோன்பாளி

மீண்டும் ஒரு ரமலான் நம்மை மிக வேகமாக கடந்து செல்கிறது. இறை விசுவாசிகளுக்கு ஒரு மிகப் பெரும் அருளாகவும், நல்லதொரு பயிற்சியாகவும் நோன்பு தரப்பட்டது. நோன்பு நோற்பதன் மூலம் நோன்பாளிகள் இரண்டு பிரதான பண்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

1. அளவில்லாத மறுமைக் கூலி

நோன்பு ஒரு மிக நீண்ட வணக்கம். இஸ்லாத்தின் ஏனைய வணக்க வழிபாடுகளோடு ஒப்பிட்டு நோக்கும்போது ஓரளவு கடினமான, மிகப் பெரும் பொறுமையை வேண்டி நிற்கின்ற ஓர் இபாதத். அன்றாட வாழ்வொழுங்கை மாற்றி வித்தியாசமானதொரு நேர அமைப்பில் செயற்படுமாறு நோன்பு போதிக்கிறது. பழகிப்போன வாழ்க்கை முறையை புதியதொரு ஒழுங்கில் மாற்றி பல்வேறு கஷ்டங்களை சகித்துக் கொண்டு நோன்பு எனும் வணக்கத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. பழகிப்போன வாழ்க்கைக்கு மாற்றமாக செயற்படுவதற்கும், அதுவும் தொடர்ந்து ஒரு மாத காலம் மேற்கொள்வதற்குமான மிகப் பெரும் பலனாகவே மறுமையில் நோன்பாளிகளுக்கு தாராளமாக கூலி வழங்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள், “நோன்பு எனக்குரியது, நானே அதற்கு கூலி கொடுப்பேன்” (முஸ்லிம்). “நோன்பாளிகள் ரய்யான் வாசல் வழியாக சுவனம் நுழைவார்கள்” (முஸ்லிம்) எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இத்தகைய மிக உயர்ந்த வெகுமதிகளை இலக்காகக் கொண்டே நோன்பு நோற்பதற்கு ஒரு விசுவாசி முன் வருகின்றான். நோன்பு நோற்ற நிலையில் ஏற்படும் சோர்வும் களைப்பும் இறைவனது மிகப்பெரும் கூலியை நினைவிற் கொள்ளும் போது ஒரு பொருட்டாக தென்படுவதில்லை. எனவே சுவனமே நோன்புக்குரிய கூலியாக இருக்கும்போது நோன்பு ஒரு கஷ்டமான வணக்கமல்ல என்பது தெளிவு. இத்தகைய விசாலமான சுவனத்தை வேட்கை கொண்டு நோன்பு வைக்கும் நோன்பாளிகளது நோன்பு தரமானதொரு செயற்பாடாக மாறிவிடுகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.