சாதியமே உன் விலை என்ன?

0

தண்டவாளங்களிலும், தூக்குக் கயிறுகளிலும், கவுரவக் கொலைகள் என்ற பெயரிலும்

விலைமதிக்க முடியாத உயிர்கள் ஜாதியின் பெயரால் கொல்லப்பட்டு வரும் அன்றாட

நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன என்றால்,

நாம் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் வாழ்ந்து வருகின்றோம் என்பதை

உணர்த்துகின்றது.

மனித உயிர்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதையும், மனித நோயத்திற்கு கொடுக்கக்கூடிய

முக்கியத்துவத்தையும், ஜாதிக்கும் அந்தஸ்துக்கும் கொடுக்க நினைக்கும் பொழுதே, அநியாயமாக

மனித உயிர்கள் கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணத்திற்காக மனித உயிர்களை

கொல்வதற்கு, ஒரு கவுரவமான பெயர் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஜாதி வெறியர்களால்

சூட்டப்பட்டுள்ளன கவுரவக் கொலை, ஆணவக் கொலை என்ற பெயர்கள்.

ஜாதி மாறி திருமணம் முடித்ததற்காக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், பொதுவிடத்தில்

ஐந்து நபர்களால் அநியாயமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காதல் திருமணம்

செய்ததற்காக கவுசல்யாவையும் கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் ஒரு

பக்கம் இருந்தாலும், இது நடக்கும் பொழுது சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்களைப் பற்றி

என்ன சொல்வது? ஜாதி வெறியைவிட இந்த வெறி மிகவும் மோசமாக இருக்குமோ என்று

எண்ணத் தோன்றுகிறது.

அந்தப் பெண்ணிடம் சங்கர் ஜாதியை மறைக்கவில்லை, அவனின் பின்னணியைப் பற்றி ஏமாற்ற

வில்லை, அவனைப்பற்றிய முழு விபரத்தையும் கௌசல்யாவிடம் தெரிவித்த பின்பே இருவரும்

காதலிக்கின்றார்கள். கௌசல்யாவும் சங்கரைப் பற்றிய முழு விபரத்தையும் தெரிந்தே,

தன்னுடைய கணவர் சங்கர் தான் என்று தீர்மானிக்கின்றார். ஆனாலும், பெற்றோர்கள் ஜாதிய

கட்டமைப்புகளுக்கு ஆட்பட்டு தன்னுடைய மருமகனையே கொன்றுவிடுகின்றார்கள்.

விழுப்புரத்தில் மூன்று தலித் மாணவிகள் மருத்துவக் கல்லுரிகளில் தற்கொலை செய்து

கொண்டார்கள். விஷ்ணுப்பிரியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ஹைதராபாத்தில் ஆய்வு பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலா தூக்கு மாட்டி தற்கொலை

செய்து கொண்டார். இவைகள் எல்லாம் தலித்துகள் தான் என்பது அதிர்ச்சிகரமான ஒன்றல்ல.

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக நடக்கக்கூடிய சமூக பிரச்சனைகளும், பாலியல்

வன்முறைகளும், ஜாதிய அடக்குமுறைகளும் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

என்பதற்கான ஆதாரம் தான் மேலே சொன்ன சில உதாரணங்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 600க்கும் மேற்பட்ட ஜாதியக் கொலைகள் நடந்துள்ளன. அதில்,

70 சதவீதத்துக்கும் அதிகமாக தலித்துகள்தான் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதுதான்

கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 80

சாதிய ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்தும் நடைபெற்றுத்தான் வருகின்றது.

இதற்கான தீர்வுதான் என்ன?

ஆளும் கட்சியிலோ அல்லது அதற்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய கட்சிகளோ ஏன் தடுக்க

முடியவில்லை என்ற கேள்விகள் பெரும்பாலான மக்களிடம் இருக்கின்றது. ஆனால், தமிழகத்தைப்

பொறுத்தவரை எல்லா அரசியல் கட்சிகளையும் சுற்றி ஜாதி என்ற வலைப்பின்னல்

சுற்றப்பட்டுள்ளது. அதனால்தான், இதுபோன்ற நிகழ்வுகளில் தவறுகளை கண்டித்து ஒரு

வலிமையான பத்திரிகை செய்திக்கூட கொடுக்க முடியவில்லை. நாம் கொடுக்கக்கூடிய

அறிக்கைகள் நம் கட்சியில் இருக்கும் ஜாதியவான்களை எங்கு பாதித்து விடுமோ என்ற

அச்சம்தான் அவர்களுக்கு இருக்கின்றது. அதனால், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.

இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தலை வேறு தமிழகம் எதிர் கொள்ள

இருக்கின்றது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் அரசியல் பலமே ஜாதியக் கட்சிகளின்

கூட்டணியோடு அந்தக் மக்களின் ஆதரவையும், ஓட்டுக்களையும் எப்படி தக்க வைத்துக்

கொள்வதற்கே குறியாக இருக்கின்றன. இரண்டு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில்

மும்முரமாக இருக்கின்றது. இந்த நிகழ்வுகள் அவர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்காது.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான பிரச்சனைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்

ஜாதியம், இந்துத்துவம் என்று ஒரு வட்டத்திற்குள் இந்தப் பிரச்சனைகளை சுருக்கிவிட முடியாது.

பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் ஜனநாயக, மதச்சார்பற்ற தன்மைகள்

மேலோங்கப்பட வேண்டும்.

அதனுடைய அர்த்தங்கள் தான் என்ன? சட்டத்திற்கு புறம்பாக ஒரு தவறுகளோ அல்லது

விதிமீறலோ நடக்கும்பொழுது காவல்துறையும் நீதிமன்றமும் அதற்கான நடவடிக்கைகளையும்

தண்டனையையும், அபராதங்களையும் வழங்க வேண்டும். ஆனால், நேரடியாகவே மக்களோ,

பாதிக்கப்பட்டவர்களோ அமைப்புகளோ தண்டனைகளை வழங்குவது, இந்தியாவின்

சட்டத்தையும் ஆட்சியையுஇவை, உணரும் பட்சத்திலேயே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க

முடியும்.

Comments are closed.