சாத்வி பிராச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் இல்லை – சுரேந்திர ஜெயின்

0

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சாத்வி பிராச்சி விஷ்வ ஹிந்து தலைவரோ அல்லது வி.ஹெச்.பி.யின் செய்தி தொடர்பாளரோ அல்லது வேறு எந்த பொறுப்பும் வகிப்பவரோ இல்லை என்று வி.ஹெச்.பி யின் துணைச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

மேலும் சாத்வி பிராச்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்றும், ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டும் உள்ளார் என்றும் அரசியலில் ஈடுபடுபவர்கள் வி.ஹெச்.பி.யில் பொறுப்புதாரியாக இருக்க முடியாது, அதனால் அவரை இனி வி.ஹெச்.பி.தலைவர் என்று அழைக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது நாள் வரை ஊடகங்கள் சாத்வி பிராச்சியை வி.ஹெச்.பி யின் தலைவர் என்றே கூறிவந்தன. இதுவரை எதிர்கருத்து எதுவும் கூறாத வி.ஹெச்.பி. தற்பொழுது சாத்வி பிராச்சியிடம் இருந்து தனிமைப்படுவது வியப்பை தருகிறது.

ஆக்ராவில் வி.ஹெச்.பி தலைவர் அருண் மஹவ்ர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நடந்த இரங்கல் பொதுக்கூட்டத்தில் சாத்வி பிராச்சி மாறுவேடத்தில் வந்து கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிகின்றன. இந்த சாத்வி பிராச்சி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளில் புகழ் பெற்றவர். முஸஃபர்நகர் கலவரம் தொடர்பாக சாத்திவி பிராச்சியின் மீது வழக்குகள் பதியப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.