சிங்கள -பௌத்த தேசியவாதத்தின் முகங்கள்

0

உலகம்: சிங்களபௌத்த தேசியவாதத்தின் முகங்கள்
-ரிஷாட் நஜிமுதீன்

இலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்தேறிய இன ரீதியான தாக்குதல் பல விஷயங்களையும் சிந்திக்க வைக்கிறது. மத்திய மாகாணமான கண்டியில் அமைந்திருக்கும் திகண எனும் ஊரில் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதமே பெரும் தாக்குதலாக மாற்றப்பட்டது. பிப்ரவரி 28ம் தேதி குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிங்கள சகோதரரை தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மார்ச் 3ம் தேதி மரணமடைகிறார். அவரது மரணம் பற்றிய சந்தேகங்கள் நிலவிய அதேநேரம், மார்ச் 5ம் தேதி அவர் அடக்கம் செய்யப்படுகிறார். அவரது உடலை அடக்கிவிட்டு முஸ்லிம் கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திகண பகுதியையும் தாண்டி அக்குரணை போன்ற பகுதிகளுக்கும் அது பரவுகிறது. ஒரு முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டதுடன் பல கோடி மதிப்பிலான சொத்துகள் அழித்தொழிக்கப்படுகிறது.

தனிப்பட்ட பிரச்சினையொன்று பூதாகரமாக்கப்பட்டு, அதற்கு இன சாயம் பூசப்பட்டு, அரசியல்மயமாக்கப்பட்டு இறுதியில் அநாகரீகமற்ற அடாவடித்தனம், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா- & பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நல்லாட்சியின்(!) மௌன அங்கீகாரத்துடன் முடிவுக்கு வந்தது என்று சுருக்கமாகக் கூறலாம். உள்ளங்களில் பயவுணர்வு செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வுகள் காரணமாக சமூகங்களுக்கிடையில் மிகப் பெரும் விரிசலேற்பட்டிருக்கிறது. இவையனைத்துக்கும் மேலாக இரு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. உயிரின் பெறுமதி நமக்கு நெருக்கமான ஒருவர் இல்லாமல் போகும் போதுதான் புரிகிறது.

எதிர்காலத்தில் இன நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் பிரச்சினையின் ஆணி வேர் எது என்பதிலிருந்துதான் அவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அரங்கேற்றிய சிங்கள- & பௌத்த இனவாதத்தின் முகங்களை சரியாக இனங்காண்பது எதிர்கால திட்டத்தை சரியாக வடிவமைக்க உதவும் என கூறலாம். சிங்கள- & பௌத்த இனவாதம் ஒரு முகம் கொண்டது எனக் கூறுவதை விட பல முகங்கள் கொண்டது எனக் கூற முடியும். ஓரளவு வரலாறு நோக்கி பின்நகர்வது இதனை சரியாக புரிந்து கொள்ள துணை புரிகிறது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.