சித்துவின் மனைவி பாரதிய ஜனதாவில் இருந்து விலகல்

0

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் கிழக்கு அமிர்தசரஸ் சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா சட்;டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இவர் பஞ்சாப் அரசாங்கத்தில் முதன்மை நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றி வந்தார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளதை தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்தவர், தன் மீதான பாரம் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷிரோன்மணி அகாளிதளத்துடன் பாரதிய ஜனதா கட்சி கொண்டுள்ள தொடர்பை சித்து மற்றும் அவரின் மனைவி தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை நவ்ஜோத் கௌர் சுமத்தியுள்ளார்.
சித்து மற்றும் அவரின் மனைவி இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed.