சித்தூர் படையெடுப்பு

0

சித்தூர் படையெடுப்பு

சித்தூர் தற்போது உதய்பூர் பகுதியில் உள்ளது. அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் சித்தூர் வட இந்தியாவில் முக்கிய பட்டணமாகும். சித்திரகாட் ரெயில்வே ஸ்டேசனுக்கு சமீபத்தில் சித்தூர் உள்ளது. 3 மைல் நீளம் (சுமார் ஐந்தரை கிலோ மீட்டர்) நீளமும், 500 அடி உயரமும் கொண்ட பரந்த குன்று காணப்படுகின்றது. அதன் உச்சியில் அதி விசித்திரமான கோட்டை; அதன் அடிப்பாகம் 13 கிலோ மீட்டர்.. அதுவே மேவார் நாட்டின் தலைநகரத்தின் திருமுகமாய் விளங்கிய ஊர்.

மூன்று முறை சித்தூர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. சித்தூர் இராஜபுத்திரர்களின் உயிர் மூச்சு.  இராஜபுத்திரர் எவரும் தான் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்காவிட்டால் “சித்தூரை அழித்த பாவத்தில் போவேன்” என்று இன்றும் சொல்லிக் கொள்வர்.

மொகலாயச் சக்கரவர்த்தி ஹூமாயூன் காலத்தில் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் சித்தூர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அதுபோன்றே அலாவுதீன் கில்ஜி காலத்தில் சித்தூர் படையெடுப் பிற்குள்ளாகியது. முகலாயப் பேரரசர் பாபரின் மகன் ஹூமாயூன் (1530 & – 1556) ஆட்சியின் போது, சித்தூர் இராணா சங்காவின் மறைவிற்குப்பின் அவரது குழந்தை உதயசிங்கும், அவனது தாயார், இராணா சங்காவின் மனைவி இராணி கருணாவதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தத. சித்தூரை அழித்திட எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இராணாசங்காவின் மறைவு அவர்களைத் துரிதப்படுத்தியது. இக்கட்டான நிலையில் ஆபத்திலிருந்து தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்றிட ஹூமாயூனுக்கு ராணி கருணாவதி கடிதம் ஒன்றைக் கொடுத்து “நான் ஹூமாயூனை சகோதரராக ஏற்றுக் கொண்டதாகவும், எனக்கு அவர் உதவி செய்யவேண்டினேன் என்று அவரிடம் சொல்’ என்றும் தூதுவனை அனுப்பிவைத்தார்.

ஆபத்துக் காலத்தில் தங்களைக் காத்துக்  கொள்ள தனக்கு விருப்பமானவரை கங்கனா சகோதரராக ஏற்று கொள்ள நாம்ருகி (ராக்கி) என்னும் பெயரையுடைய பட்டுக் கயிற்றுடன் தூதர் சென்றார்.

அதனை இஷ்டமிருந்தால் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மறுத்து விட்டாலும் மறுத்துவிடலாம், அது அவனுடைய இஷ்டம். ஆனால் அதனைப் பெற்றுக் கொண்டு விட்டால் ஆபத்திலிருக்கும் அபலைக்கு உதவியைச் செய்தே தீர வேண்டும். இராணி கருணாவதியின் கடிதததை கொண்டு சென்ற குதிரை வீரன் கங்கணத்தை ஹூமாயூனிடம் விவரம் சொல்லித் தந்தார்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.